கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ ஆதரவு அதிகரிக்கும் நிலையில்,  எக்ஸ் தளம் முடக்கம்; புது கணக்கை தொடங்கினார் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பட்டதாரி நிறுவனர் திப்கே.

* தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு: 4 பெண்களுக்கு இடம்: 19 மாவட்டங்கள் புறக்கணிப்பு. தமிழ்நாட்டில் 74 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றிட உடனடியாக  நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் வலியுறுத்தல்.

* அனைத்து மதரசாக்களிலும் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க பா.ஜ.க. அரசு உத்தரவு

தி இந்து:

* புதிய யோசனைகள் தீர்ந்து விட்டன; பிரதமர் மோடி அரசிடம் பொருளாதார அறிவு இல்லை: காங்கிரஸ் விமர்சனம்.

தி டெலிகிராப்:

* ’கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ திடீர் எழுச்சிக்கு, அரசியல் மீதான இளைஞர்களின் விரக்தியே காரணம் – எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து. தலைமை நீதிபதி விமர்சனத்தை தொடர்ந்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ பெயரில் புதிய கட்சி இணையத்தில் தொடக்கம்: 6 நாளில் 1.55 கோடி இளைஞர்கள் இணைந்தனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஓயமாட்டோம்’ –  நீட் வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசைச் சாடும் ராகுல் காந்தி.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *