வடமாநிலங்களில் பலத்த மழை கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு 10 ஆயிரம் பக்தர்கள் மீட்பு

1 Min Read

கேதார்ரநாத், மே 22 வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. யாத்திரை சென்ற 10 ஆயிரம் பக்தர்களை தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மீட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேசமயம், மலை மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் உள்ளது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேதார்நாத் சிவன் கோவிலுக்கு  செல்லும் பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ருத்ரபிரயாக் மாவட்டம் சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. பிரதான நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் யாத்திரை சென்றுகொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பயணத்தை தொடர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் மழை, இருள் சூழ்ந்த மோசமான வானிலை நிலவியபோதிலும் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த 10450 பக்தர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

மீட்புப் பணிகளை முடிந்தபின், சாலையில் குவிந்திருந்த பாறைகள் மற்றும் இடிபாடுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. சிறிது நேரத்தில் அதிகாரிகள் இந்த பணியை முடித்து, நெடுஞ்சாலையை சீரமைத்தனர். இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *