சென்னை. மார்ச் 27 – கரோனாவுக்கு பின் ஞாபக மறதி, நுரையீரல் தொற்று, சுவாசப் பிரச்சினை போன்றவை பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது என அப்போலோ மருத்துவமனை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் அப்போலோ மருத்துவமனையின் சார் பில், சுவாச மண்டலம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுக் கான கருத்தரங்கு நேற்று (26.3.2023) நடந்தது. இதில் நெஞ்சக சிகிச்சைத் துறை மருத்துவ நிபுணர்கள் பலர் பங்கேற்று கருத்துகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பேசிய அப்போலோ மருத்துவமனை குழு துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, ‘இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக, கரோனோ தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது பரவலின் வேகம் குறைந்து இருந்தாலும் பெரும்பாலானோருக்கு நுரையீரல் மற்றும் நெஞ்சக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் கரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தற்போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதித்தனர். கருத்தரங்கின் நிறைவில் அப்போலோ மருத்துவர்கள் நரசிம்மன், சுரேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆஸ்துமா, நீண்ட நாள் கோவிட் பாதிப்பு, முதியவர் களுக்கான தடுப்பூசி முறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கபட்டது. கரோனா தொற்றுக்கு பிறகு பெரும் பாலானோருக்கு ஞாபக மறதி, நுரையீரல் தொற்று, சுவாச பிரச்சினை, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகள் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும், வழக்கத்தை காட்டிலும் நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவிட், இன்புளுயன்ஸா பாதிப்பிற்கு பிறகு மாரடைப்பு மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளும் பரவலாக கண்டறியப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.