புதுச்சேரி, மே 21- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய பா.ஜ.க அரசின் நயவஞ்சக திட்டமான நீட் தேர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-05-2026 அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை புதுச்சேரி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் தலைமை தாங்கி கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்கள் இரா.சடகோபன், இர.இராசு பொதுக்குழு உறுப்பினர்கள் கி.அறிவழகன், மாவட்டச் செயலாளர் தி. இராசா, மாவட்ட துணைத் தலைவர் மு. குப்புசாமி, தொழிலாளரணித் தலைவர் வீர. இளங்கோவன்,விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கே.மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழகத் தலைவர் பி.அறிவுச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி தி.மு.க மேனாள் அமைப்பாளர் அ.கபிரியேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர்
பெ.அரிமாத் தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [எம்] புதுச்சேரி மாநிலச் செயலாளர் சு.இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், தி.மு.க மாநில அமைப்பாளரும், சட்டப் பேரவை மேனாள் எதிர்க்கட்சித் தலைவரமான இரா.சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் எனவும், இதனால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதையும், மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறி வருவதையும் அதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதலின் பேரில் கழகம் தொடர்ந்து நீட் எதிர்ப்பு பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டே இருக்கும் எனவும், நீட் வினாத்தாள் பாஜகவினரின் மூலமாக 89 முறை வெளியானதையும்,48 முறை மறுதேர்வு நடைப்பெற்ற செய்திகளையும் எடுத்து கூறி சிறப்பாக கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதற்கு கழகத்தின் சார்பில் நன்றி எனவும், தொடர்ந்து நீட் ரத்து செய்வது வரை போராடுவோம் எனவும் உரையாற்றினார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நகராட்சி மற்றும் கொம்யூன் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், எஸ். கிருஷ்ணசாமி,களஞ்சியம் வெங்கடேசன், இராம.சேகர், பெ. ஆதிநாராயணன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் தி.மு.க மகளிரணி மாநிலத் தலைவர் காயத்ரி சிறீகாந்த், புலவர் கோ. கலியபெருமாள், டாக்டர் கு.ராஜ்குமார், லோ.அருள், கார்த்திக், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வே.கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெ.வேலன், இரா. இளங்கோவன், “குறள்நெறி” சண்முகம், புதுச்சேரி தாயுமானவர் தந்தை பெரியார் மன்ற தலைவர் பா. சக்திவேல், அ.ச. தினா, ஆனந்தி தினா, திமுக மகளிர் அணி தோழிகள் அமுதாகுமார், பொன்னி ராஜன், புவனேஸ்வரி, விஜயலட்சுமி, குணா கழகத் தோழர்கள் சண்முகம், வரலட்சுமி, இரா. சுந்தர், பெரியார் பிஞ்சு இரா. பிரபாகரன், மணித். கோவிந்தராஜ், தாஸ் தி.மு.க பொறுப்பாளர்கள் பெல்லாரி கிருஷ்ணமூர்த்தி, மாணவர் கழக அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன் மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகளில் பொறுப்பாளர்களும் தோழர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
