
திருவாவூர், மே 17 திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 17.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் புறவழிச் சாலை ரோட்டரி சங்க அரங்கத்தில் காலை 9 மணிக்கு எழுச்சியோடு தொடங்கியது.
திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி தலைமை ஏற்று உரையாற்றினார்.
மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஈவேரா, திருவாரூர் ஒன்றிய தலைவர் க.கவுதமன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் க.வீரையன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தொடக்க உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பயிற்சிப் பட்டறையை நெறிப்படுத்தியும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறியும் நோக்க உரையாற்றினார். தொடர்ந்து ‘தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ எனும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி முதல் வகுப்பினை தொடங்கினார். ‘பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு’ என்ற தலைப்பில் கவிஞர் கலி. பூங்குன்றன், அவர்களும், ‘ஹிந்து ஹிந்துத்துவா சங்பரிவார்
ஆர்.எஸ்.எஸ்.’ என்ற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘புராண இதிகாச புரட்டுகள்’ என்ற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன், ‘சமூக நீதி வரலாறு’ என்ற தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன், ‘தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’ என்ற தலைப்பில் வி.சி.வில்வம். ஆகியோர் வகுப்பெடுக்க இருக்கிறார்கள்.
நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் க.முனியாண்டி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா. கழக பேச்சாளர் இராம. அன்பழகன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் இரா. வீரக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், திருமருகல் ஒன்றிய தலைவர் இராச. முருகையன், நாகை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, நாகை நகர செயலாளர் சண்.ரவிக்குமார், திருவாரூர் கோ.ராமலிங்கம். குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர். நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா. தன்ராஜ், நன்னிலம் ப.க.தலைவர் சு.கரிகாலன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இரவிக்குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவழகன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், கு.சிவானந்தம். குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
