4.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அனைத்து பிரிவு மக்களின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆந்திரா அமைச்சரவை ஒப்புதல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கடவுளை மகிழ்விப்பதற்காக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று எந்த ஒரு புனித நூலிலும் கட்டளை இல்லை என்பதை கவனத்தில் கொண்டு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், “இனிமேல் மத வழிபாட்டுத் தலங்களில் நள்ளிரவு நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய உத்தரவிடுமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக ஒருபோதும் எதிர்க்கவில்லை, ஆனால் அனைவருடனும் கலந்தாலோசித்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
தி டெலிகிராப்:
* மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் ஏன் குறி வைக்கப்படு கிறார்கள் என்று காங்கிரஸ் கேள்வி.
– குடந்தை கருணா