சண்டைக்குப் போகிற போர்வீரன் போர் முனையிலே துப்பாக்கியை நீட்டும் பொழுது நாம் சாவுக்குத் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று தன்னை ஜாக்கிரதை செய்து கொள்வதில் கவலை கொண்டு துப்பாக்கித் தூக்குகிறான் என்றால் அவன் கோழைத்தனத்தால் குண்டு நேராகப் போகாமல் கோணலாகப் போனாலும் போகும். இல்லையா? ஆனால் என்ன நினைக்க வேண்டும்? நாம் ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ இந்த முயற்சியில் நாம் சாவதற்குப் பயப்படக் கூடாது என்று நினைத்தால் தான் துப்பாக்கி விரைப்பாக இருக்கும், அல்லவா? அந்த மாதிரிதான் நாங்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பதும், வருவதை அனுபவிக்கலாம், நாம் தைரியமாக முன்னால் நின்று நம்மாலானதைச் செய்து விட்டுப் போவோம் என்பதன்றி வேறென்ன?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1970)
Leave a Comment
