சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்) மறைந்த டாக்டர் ஜி.ராஜூ (வயது-94) அவர்கள் நேற்று (13.5.2026) மறைவுற்றார். அவரது உடல் நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
டாக்டர் ஜி.ராஜூ அவர்களின் துணைவியாரிடமும், மகன் ரா.பிரபாகரிடமும், குடும்பத்தாரிடமும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலும் ஆறுதலும் கூறினார்.
உடன் தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எம். வரதன் ஆகியோர் இருந்தனர்.
