கேள்வி: பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த ஈ.வெ.ரா.வின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராகுகாலம் முடிந்த பிறகுதானே பதவி ஏற்றுள்ளார்?
பதில்: தன் தாத்தாவின் கடவுள் எதிர்ப்பைப் புரிந்துகொண்டார் போலும்! அதனால் இவ்வாறு நடந்து கொள்கிறார். இதேபோல் தானே ஹிந்து கோவில் களாக சென்று வழிபடுகிறார் ஸ்டாலினின் மனைவி துர்கா.
– ‘தினமலர்’ வார மலர்,
‘அந்துமணி பதில்’, 26.3.2023, பக்கம் 10
பதவி ஏற்பு நாளையும், நேரத்தையும் முடிவு செய்வது சபாநாயகர் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் எழுதும் ‘தினமலரின்’ ‘புத்தி தீட்சன்யம்’ இதுதானோ!
ஸ்டாலின் மனைவி கோவிலுக்குச் செல்லுவதை வலுக்கட்டாயமாகத் தடுப்பது பகுத்தறிவு ஆகாது – பகுத்தறிவு இருந்தால் ‘தினமலர்’ இப்படி எழுதாது.
ஆமாம்… ஹிந்துத்துவாவை அறிமுகப்படுத்திய சாவர்க்கார் கடவுள் நம்பிக்கையற்றவர்தானே! அவரைப் பின்பற்றுமா ‘தினமலர்க்’ கும்பல்?
‘நானேதான் கடவுள்’ (அகம்பிரமாஸ்மி) என்று சொல்லும் சங்கராச்சாரியார் கோவில் கோவிலாகச் சென்று கும்பிடுத்தண்டம் போடுவானேன்?