சென்னை, மே 11- தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் நேற்று (மே 10) தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் அலுவலக (சிஎம்ஓ) பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் 14 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு தற்காலிக மாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முக்கிய அதிகாரிகள் மற்றும்
பிரிவு அலுவலர்கள்:
செல்வ கணபதி உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை) – துணைச் செயலாளர்.
கணேஷ் (சட்டத் துறை) – தனிச் செயலாளர்.
என். பிரபாகரன் (மனிதவள மேலாண்மைத் துறை) – பிரிவு அலுவலர்.
இ.பிரவீன் குமார் (பள்ளிக் கல்வித் துறை) – பிரிவு அலுவலர்.
ஏ.வி. ஹரிஷ் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) – உதவிப் பிரிவு அலுவலர்.
எஸ்.பிரகாஷ் கிறிஸ்டோபர் (பொதுத்துறை) – உதவிப் பிரிவு அலுவலர்.
எஸ்.சிவசங்கரன் (தொழில் துறை) – நேர்முக உதவியாளர்.
ஆர்.ஹரிகிருஷ்ணன் (பள்ளிக் கல்வித் துறை) – உதவியாளர்.
ஆர்.பூபாலன் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) – உதவியாளர்.
பி.சந்தோஷ் குமார் (உயர்கல்வித் துறை) – தட்டச்சர்.
வி.விக்னேஷ் (சட்டத் துறை) – தட்டச்சர்.
வி.கேசவன் (பொதுத்துறை) – பதிவு எழுத்தர்.
எஸ்.செல்வகுமார் (WDAP துறை) – அலுவலக உதவியாளர்.
வி. அசோக் (WDAP துறை) – அலுவலக உதவியாளர்.
