வாஷிங் மெஷின் அரசியலும்… திசைமாறிய அமலாக்கத்துறையும்!-புதூரான்

3 Min Read

இந்திய அரசியலில் ‘ஆபரேஷன் தாமரை’ என்பது ஒரு தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை நிலைகுலையச் செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சண்டிகரில் நடந்த ஒரு விபரீத நிகழ்வு அமலாக்கத்துறையின் (ED) முகத்திரையைக் கிழிப்பது மட்டுமன்றி, சமூக வலைதளங்களில் கேலிப்பொருளாகவும் மாறியுள்ளது.

பெயர்ப்பலகை பார்க்காத ‘வேட்டை’

பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மானின் உதவியாளர் ரஜ்பீர் குஹ்மான் என்பவரைக் குறிவைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், சண்டிகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நுழைந்தனர். அங்கு அவர்கள் செய்த தவறு, இந்திய அரசியலின் தற்போதைய நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

குழப்பமான அதிரடி: பெயர்ப்பலகையைச் சரியாகக் கவனிக்காமல், ஆம் ஆத்மி பிரமுகர் வீட்டிற்குப் பதில், பஞ்சாப் பாஜகவின் முக்கியப் புள்ளியான நிதின் கோஹல் வீட்டிற்குள் அதிகாரிகள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

அதிர்ச்சியில் உறைந்த பாஜக பிரமுகர்: திடீரென வீட்டிற்குள் நுழைந்தது தனது சொந்தக் கட்சி ஏவிவிட்ட ஏஜென்சிதான் என்று தெரியாமல், நிதின் கோஹல் நிலைகுலைந்து போனார். தன் கைவசம் இருந்த கணக்கில் வராத பணத்தை மறைக்க வேறு வழியின்றி, 5 பைகளில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் பணத்தை 10-வது மாடி பால்கனியில் இருந்து கீழே வீசினார்.

சுவர்களில் தொங்கிய ‘பாதுகாப்பு’ முகங்கள்!

சோதனையின் போது அதிகாரிகள் கண்ட காட்சிகள் அவர்களை உறைய வைத்தன. வீட்டின் சுவர்கள் முழுவதும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மகாராட்டிரா முதலமைச்சர் உபி முதலமைச்சர் மத்தியப் பிரதேச முதலமைச்சர் போன்றோரோடு நிதின் கோஹல் இருக்கும் படங்களாக நிறைந்து இருந்தது பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களின் படங்கள் நிறைந்திருந்தன.

“நாங்கள் வந்தது ஆம் ஆத்மி பிரமுகர் வீட்டிற்கு அல்ல, ‘நமது ஆள்’ வீட்டிற்கு” என்பதை உணர்ந்த அதிகாரிகள், விசாரணையை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளனர்.

தவறான இடத்திற்குச் சென்றது ஒருபுறம் இருக்கட்டும்; ஆனால் ஒரு பாஜக பிரமுகரின் வீட்டில் இருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பால்கனி வழியாகப் பறந்ததுதான் இங்கே மிகப்பெரிய கேள்விக்குறி.

சமூக வலைதள தணிக்கையும்…
ஏஅய் (AI) மாயையும்!

இந்தக் காட்சிகள் வீடியோவாகப் பரவத் தொடங்கியதும், அவை மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டன. இன்னும் ஒருபடி மேலே போய், அந்த வீடியோக்களைப் பதிவேற்றுபவர்களுக்கு அது ‘செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட போலி வீடியோ’ என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஊழல் ஆதாரங்கள் கண்ணெதிரே சிதறிக் கிடக்கும்போது, அதைத் தொழில்நுட்பத்தின் பெயரால் போலி என்று மறைக்க முயல்வது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.

இவர்கள் தூய்மைவாதிகளா?

அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள், ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறிவிட்டனவோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது ‘ஊழல்வாதி’ என்று முத்திரை குத்தப்படுபவர்கள், பாஜகவிற்குத் தாவியவுடன் ‘தூய்மைவாதிகள்’ ஆகிவிடுகிறார்கள்.

ஆபரேஷன் தாமரை மூலம் கட்சி மாறுபவர்களுக்கு அமலாக்கத்துறை ஒரு ‘வாஷிங் மெஷின்’ போலச் செயல்பட்டு அவர்களைப் புனிதப்படுத்துகிறது.

ஆனால், சண்டிகர் பால்கனியில் இருந்து சிதறிய அந்த 500 ரூபாய் நோட்டுகள் ஒரு உண்மையை உரக்கச் சொல்கின்றன: “பயத்தின் காரணமாகக் கட்சி மாறுபவர்கள் தூய்மைவாதிகள் அல்ல; அவர்கள் தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே.”

கண்ணுக்குத் தெரிந்த ஆதாரங்களையே ‘போலி’ என்று முத்திரை குத்தும் இந்த அரசியல் கலாச்சாரம், நாட்டின் சட்டத்தின் மீதான நம்பகத் தன்மையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது.

இனிமேலும் இவர்களைத் தூய்மைவாதிகள் என்று அழைப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகவே அமையும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *