ந.க.எண். 238/2026/அ2 நாள்.06.05.2026
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி அன்னூர் சிறப்புநிலை பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட அன்னூர் பேரூராட்சி மன்றத்தின் ஒப்புதல் பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அன்னூர் பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட தங்கள் மேலான கருத்துருக்கள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் செயல் அலுவலர், அன்னூர் பேரூராட்சி, அம்மணி அருணாநகர், குமாரபாளையம், அன்னூர், கோயம்புத்தூர்- 641653 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் 22.05.2026 மாலை 6.00 மணிக்குள் தெரிவிக்கலாம் என இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
செயல் அலுவலர்,
அன்னூர் சிறப்புநிலை பேரூராட்சி,
கோயம்புத்தூர் மாவட்டம்.
வெ.ஆ.எண் 133/2026/செ.ம.தொ.அ/கோவை
