உலகப் பத்திரிகைச் சுதந்திர நாள் இன்று – 3.5.2026

உலகம் முழுவதும் பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த இந்த நாள் கொண்டா டப்படுகிறது.

மே 3 அன்று, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டா டப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை  எடுத்துரைக்கவும், பத்திரிகையா ளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரிப்பதற்காகவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.

செய்தி சேகரிப்பின் போதும், அதிகார வர்க்கங்களாலும் உயிர்நீத்த, கொல்லப்பட்ட, அனைத்து ஊடக வியலாளர்களுக்கும் இந்த நாள் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.

உலகப் பத்திரிகைச் சுதந்திர நாள்: வரலாறு

1991 ஆம் ஆண்டு நமீபியாவில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டின் போது உலகப் பத்திரிகைச் சுதந்திர நாளைக் கொண்டாடுவதற்கான முயற்சி முதலில் ஆப்பிரிக்கப் பத்திரிகையாளர்களால் தொடங்கப்பட்டது.

டிசம்பர் 1993 இல், யுனெஸ்கோ பொது மாநாட்டின் பரிந்துரைக்குப் பிறகு அய்க்கிய நாடுகள் பொதுச் சபை அதைக் கொண்டாட முடிவு செய்தது.

உலகப் பத்திரிக்கைச் சுதந்திர நாள் – பத்திரிகைச் சுதந்திரத்தைத் தடுக்கவும், தீங்கு செய்யவும் முயற்சிக்கும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகும்.

இந்த நாளானது சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்க வேண்டிய நாளாகும்.

2026 ஆம் ஆண்டில் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 157 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாக, எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் (Reporters Sans Frontiers – reporters without Borders) அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட கீழிறிக்கமாகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு ஊடக நிறுவனங்களின் உரிமையா ளர்களைக் கட்டுப்படுத்தி, ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவதும், கைது நடவடிக்கைகள்மூலம் ஊடக வியலாளர்களை அச்சுறுத்துவதும் நாளும் தொடர் கதையாகி வரும் நிலையில், இந்நாள் அதை நமக்கு கவனப்படுத்துகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *