நாளை (1.5.2026) ‘மே’ முதல் தேதி; மேதினி யெங்கும் கொண்டாடும் தொழிலாளர் தம் உரிமையாம் ‘‘8 மணிநேர வேலை மட்டுமே’’ என்ற மனிதாபிமான கோரிக்கை வெற்றி பெற்ற திருநாள்!
பல வகையிலும் தொழிலாளர்களின், மக்களின் உரிமைகள் பறிப்பு, பன்னாட்டு முதலாளிகளாலும், பிறவி முதலாளிகளாலும் சுரண்டப்படுவதை எதிர்த்து, விழிப்போடு இருந்து, அவர்களது வாழ்வில் விடியலைக் கொண்டு வந்த நாள்!
திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் தொடக்கத்திலேயே மே தினத்தைக் கொண்டாடியதை எவரே மறுப்பர்?
தொழிலாளியை, பங்காளியாகப் பார்க்கும் இலக்கு நம்முடையது என்பது முக்கியம்.
அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்!
தஞ்சை
30.4.2026

