சென்னை, ஏப். 29 இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி யிருந்த தமிழ்நாடு மாநிலம், 2025-2026ஆம் நிதியாண்டிலும் 10.83 சத விகிதம் என்ற இரட்டை இலக்க பொரு ளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை கூறியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங் களுக்கான தரவுகளை ஒன்றிய புள்ளி யியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. 2011-2012 நிதியாண்டில், இந்தியாவின் தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 7.4 சதவிகிதம் என்ற வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு கூடுதல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த அய்ந்தாண்டுகளில்- அதாவது, 2021-2022 முதல் 2025-2026 வரை தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதமானது, ஆண்டுக்கு சராசரியாக 9.07 சதவிகித மாக இருந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதமானது, முந்தைய ஐந்தாண்டு (2016-2017 முதல் 2020-2021 வரை) சராசரி யான 5.21 சதவிகிதம் என்ற வளர்ச்சியை விட 3.86 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ் நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024-2025 ஆம் நிதியாண் டில் ரூ. 31.19 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அது 2025-2026ஆம் நிதியாண்டில் ரூ. 35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் சராசரி ஆண்டு வருமா னத்தைப் பொறுத்தவரை, தமிழ் நாட்டில் ரூ. 4.08 லட்சமாக உள்ளது. இதில், ரூ. 4.33 லட்சத்துடன் கருநாடகம் முதலிடத்தில் உள்ளது.

