மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் விற்பனை உரிமம் ரத்து! உணவுப் பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை, ஏப்.29 முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் மாம்பழத்தைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மாம்பழம் என்றாலே அனை வருக்கும் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழம் தான். இருப்பினும் பல மாவட்டங்களில் மாம்பழ விளைச்சல் காணப்படும்.

கோடை காலம் தொடங்கியதையடுத்து மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி விட்டன. கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கான வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிக லாபத்திற்காக ரசாயனத்தை பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *