கல்லக்குறிச்சியில் தமிழர் தலைவர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு!

தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

1.5.2026 அன்று கல்லக்குறிச்சியில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறைக்கு  வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில், மாநில கழக மருத்துவரணிச் செயலாளர் மருத்துவர்  கோ.சா.குமார், காப்பாளர் ம.சுப்பராயன், பொதுக் குழு உறுப்பினர் ச.சுந்தரராசன், நகர தலைவர் இரா.முத்துச்சாமி, நகர செயலாளர் நா.பெரியார், சி.முருகன் மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆகியோர் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு-கூத்தக்குடி பிரிவு சாலை மேம்பாலம் அருகில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அழைத்து மகிழும்
கோ.சா.பாஸ்கர் மாவட்ட கழகத் தலைவர்,
– குழ.செல்வராசு மாவட்டச் செயலாளர், திராவிடர்கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *