நீண்ட நாள் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்த ‘திராவிட மாடல்’ அரசு முத்துப்பேட்டையில் 19 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

முத்துப்பேட்டையில் 19 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப் பட்டது. இதனால் நீண்ட நாளான குடிநீர் தட்டுப்பாட்டை அரசு சரி செய்துள்ளது. இதற்காக பொதுமக்கள் அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.முத்துப்பேட்டையில் உள்ள அரசு துறை கட்டடங்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

இதில் ஏற்கனவே பேரூராட்சி அலுவலகம் கட்டடம், சார்பதிவாளர் கட்டடம், அரசு மருத்துவமனை கட்டடம், உழவர் சந்தை கட்டடம் உள்ளிட்ட பல்வேறு துறை கட்டடங்கள் அரசு பள்ளிகள் கட்டடங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பிலான அரசு பள்ளி கட்டடங்கள், பாலங்கள் துணை சுகாதார நிலைய கட்டடங்கள் நூலக கட்டடங்கள் கட்டித் திறக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது.

அதன் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதிக்கும் என்னென்ன தேவை என்பதை கடந்த அய்ந்தாண்டு காலத்தில் திட்டமிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறை கட்டடங்கள், மக்கள் பயன்பெறும் திட்டங்களின் கட்டடங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதேபோல் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் முத்துப்பேட்டை 18 வார்டுகள் கொண்ட ஒரு பேரூராட்சி யாகும். சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இங்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மெயின் குடிநீர் இணைப்புகளில் நெடுவெங்கும் சட்டவிரோதமாக இணைப்புகள் எடுத்து பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பேரூராட்சி பகுதிக்கு வரும் குடிநீர் ஒதுக்கிய அளவை விட பாதியளவு மட்டுமே வந்து சேருகிறது. பேரூராட்சி பகுதியில் ஒவ்வொரு கோடை நேரத்திலும் கடும் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அதேபோல் திமுக பேரூராட்சி நிர்வாகம் அமைந்த பிறகு பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகள் பகுதியிலும் மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட முடிவு செய்து ஒவ்வொரு வார்டுகள் பகுதிலும் படிப்படியாக சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்து கட்டி திறக்கப்பட்டு தற்போது பேரூராட்சி பகுதியில் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது உள்ளது.

இதனால் நகரில் கோடைகாலத்தில் குடிநீர்  தட்டுப்பாட்டுக்கு இந்த 19குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் முத்துப்பேட்டை மக்கள் மகிழ்ச்சி அடைந்து திமுக அரசுக்கும் பேரூராட்சிக்கு நன்றி கூறி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *