சென்னை, ஏப். 23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (23.4.2026) தனது குடும்பத்தினருடன் சென்று சென்னை தேனாம் பேட்டையில் உள்ள எஸ்அய்இடி(SIET) கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வந்து வாக்களித்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தகுதியுள்ள அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியதுடன், பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார். வாக்குச்சாவடி மய்யத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முக்கியத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

