தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பதிவு!

5 Min Read

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போதும் நீதி – கண்ணியம் – கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது!
டில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!
டில்லியின் ஆணவத்தையும் – ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!

சென்னை, ஏப்.18 தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போதும் நீதி – கண்ணியம் – கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது! டில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டில்லியின் ஆணவத்தையும் – ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம் என்று தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களுமே நேற்று (17.4.2026) குரல் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தன.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘டில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு’’ என்று பதி விட்டுள்ளார்.

இன்னொரு சமூக வலைதளப்பதிவில் “தென்னிந்தியா ஒன்றிணைந்தது; குரல் கேட்கப்பட்டது. ஜனநாயகம் வென்றது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

டில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!

தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலை தளப்பதிவு வருமாறு:–

டில்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டில்லியின் ஆணவத்தையும்– ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா!

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவு வருமாறு:–

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!

இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பது தான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமி ழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போதும் நீதி, கண்ணியம்,  கூட்டாட்சி ஆகிய வற்றுக்காகவே நின்றுள்ளது.

தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!

நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடை முறை யையே நாம் வலியுறுத்தினோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி!

இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!

இவ்வாறு தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா!

இதைத் தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்க்கண்டவாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அது வருமாறு:

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்த வரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனி யுங்கள்.

“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறை வேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”–அய் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.

மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்!

மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்.

எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரைய றை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.

குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதா வையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை.

இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை.

நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டி ருக்கலாம். அதனையும் செய்யவில்லை.

இது நீதியல்ல;

இது உண்மையான நோக்கமல்ல;

இது வெறும் காட்சிப்பிழை!

இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடி வெடுத்து விட்டனர்.

இந்தியா கூட்டணித் தலைவர்கள்
அனைவருக்கும் நன்றி!

நாடாளுமன்ற வாக்கெடுப்பில், தொகுதி மறுவரையறை சட்டமுன்வடிவைத் தோல்வியடையச் செய்ததைத் தொடர்ந்து, தி.மு. கழகத் தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆங்கிலப் பதிவின் தமிழ் மொழியாக்கம் வருமாறு:

இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி!

பா.ஜ.க. அரசு எந்தக் கலந்தாலோசனையும், கருத்தொற்றுமையும் இல்லாமல் திணிக்கப் பார்த்த தொகுதி மறுவரையறை சட்டமுன்வடிவு தொடர்பான நம் கவலைகளை வெளிப்படுத்திப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சகோதரர் ராகுல் காந்தி அவர்க ளுக்கு என் நன்றி.

மேலும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி அம்மையார், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சி.பி.அய். தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (UBT) தலைவர்  உத்தவ் தாக்கரே, பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக், சிரோமணி அகாலி தளத் தலைவர்  சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றிகள்.

இந்தியா ஒன்றுபட்டு நின்றது,
பா...வின் சூழ்ச்சியை வென்றது!

நம்மை வடக்கு – தெற்கு எனப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இந்திய அரசியல் வரைபடத்தையே தங்களுக்குச் சாதகமான முறையில் மாற்றியமைக்கப் பார்த்தார்கள். ஆனால் இந்தியா ஒன்றுபட்டு நின்றது, பா.ஜ.க.வின் சூழ்ச்சியை வென்றது! இது தொடக்கம் மட்டுமே!

இனிவரும் நாள்களில் பா.ஜ.க. பெறும் அடி ஒவ்வொன்றும் இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு, எதிர்க்கட்சிகளான நாம் அனைவரும் இதே போல தொடர்ந்து ஓரணியில் நிற்க வேண்டும்!

இவ்வாறு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *