ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்றுபட வேண்டியது கட்டாயம் கருநாடக துணை முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

1 Min Read

ஈரோடு, ஏப். 17- ஜன நாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசினார்.

ஈரோடு சம்பத் நகரில் கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, அவர் மேலும் பேசியதாவது:

ஜனநாயகத்தை காக்க நாம் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

திமுக, காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டால் தான் இந்தியாவில் நல்லாட்சியும் அமைதியும் நிலவும். பாஜக இந்தியாவில் வேற்று மையை உருவாக்க முயற் சிக்கிறது. இதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது.

இந்திய தேசத்தின் கட்டமைப்பில் தமிழ்நாடு மற்றும் கருநாடகா முக்கிய பங்காற்றுகின்றன. இதில், தமிழ்நாடு 2ஆவது முக்கியமாக பங்களிக்கிறது. கடந்த அய்ந்தாண்டுகளாக நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் திறம்பட செயல்படுத்தியுள்ளார்.

தற்போது தொடங்கப் பட்டுள்ள புதிய கட்சி கள் என்ன செய்ய போகி றார்கள், அவர்களின் கொள்கைகள் தெரியாது.

தற்போது உள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கான கூட்டணி. இளைஞர்கள், மகளிருக்கு உங்கள் தலைவர்களை திரையில் தேடாதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *