சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரிகளுக்கு ப்ராஜெக்ட் அசோசியேட் வேலை!

1 Min Read

சென்னை பல்கலைக் கழகத்தில் டிபிடி-யின் நிதியுதவியுடன் செயல் படுத்தப்படும், “குழந்தை களுக்கான அரிய மரபணு நோய்கள் குறித்த சிறப்புத் திட்டம்” (Mission Program on Pediatric Rare Genetic Disorders) எனும் திட்டத்தில், முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ‘ப்ராஜெக்ட் அசோசியேட்-I’ பணியிடத்திற்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இது பற்றிய விவரம் வருமாறு:

பணி: புராஜெக்ட் அசோசியேட் – 1

காலியிடம்: 1

ஊதியம்: மாதம் ரூ.31,000 +24 சதவீதம் எச்ஆர்ஏ

தகுதி: உயிர் மருத்துவ மரபியல்(Bio Medical Genetics) பாடத்தில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி பிரிவினர்கள், பெண்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ் களையும் கொண்டு வர வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் “Mission Program on Pediatric RareGenetic Disorders” Project பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து “Dr. A.K. Munirajan, Professor and Head Department of Genetics, Dr. ALM PG Institute of Basic Medical Sciences, University of Madras, Taramani Campus, Chennai – 600113” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.4.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு www.unom.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *