வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில்: ஜூலைக்குள் பணிகள் முடியும்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஏப். 5- சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடை யேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக் குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் பறக்கும் ரயில் திட் டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, முதல் கட்டமாக சென்னை கடற் கரை – மயிலாப்பூர் இடையேயும், இரண்டாவது கட்டமாக மயிலாப் பூர் – வேளச்சேரி இடையேயும் பணிகள் முடிக்கப்பட்டு, இந்த வழித்தடத்தில் தினமும் 150 மின்சார ரயில் சேவைகள் இயக்கப் படுகின்றன. இதைத் தொடர்ந்து 3ஆவது கட்டமாக, வேளச்சேரி – பரங்கிமலை திட்டப்பணி ரூ.495 கோடியில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 5 கி.மீ. தொலைவில், 4.5 கி.மீ.க்கு 167 தூண்களுடன் ரயில் பாதைகள் அமைக்கப் பட்டன.

இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை யால் பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.இப்பிரச் சினைக்கு 2 ஆண்டுக்கு முன்பு தீர்வு காணப்பட்டதால், கடந்த சில மாதங்களாக இந்த வழித் தடத்தில் பணிகள் மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது கர்டர்கள் (தாங்கு பாலம்) பொருத்தும் பணி நடைபெறுகிறது.

மாநகரின் முக்கிய ரயில் திட்டம் என்பதால், பயணிகள் மத்தியில் இத்திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது. இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, “சென்னையில் அடுத்த கட்ட போக்குவரத்து வளர்ச்சியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியமானதாக மாறி வருகிறது.

அந்த வகையில், பரங்கிமலை யில், மேம்பால மின்சார ரயில் பாதை இணைப்புஎன்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே, திட்டப்பணிகள் விரை வில் முடிந்து, மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டுவர வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டத்தில், புழுதி வாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம் பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன.

பல ஆண்டு களாக நிலுவையில் இருந்த ஆதம் பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரமாண் டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

தற்போது, பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவில் 250 மீட்டர் வரை பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம் 36 கர்டர்களில் 18 கர்டர்கள் பொருத் தப்பட்டுள்ளன.

ரயில் நிலையப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலைக்குள் முடிக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவை தொடங்கப் படும் என்று அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *