கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்: பரமக்குடி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு.

* அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதுதான் பாஜக-ஆர்.எஸ்.எஸ். நோக்கம், ராகுல் கடும் கண்டனம்.

* நிதிஷ் பங்கேற்கும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நாளை ஏப்ரல் 14இல் நடக்கிறது பீகாரின் புதிய முதலமைச்சர் ஏப்ரல் 15இல் பதவியேற்க வாய்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கான சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்: சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நடத்துங்கள், பிரதமருக்கு கார்கே கடிதம்.

* நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் கொண்டு வரப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்: மக்களவை, மாநிலங்களவை கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள், பிரதமருக்கு காங்கிரஸ் கோரிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஹுமாயூன் கபீருடன் பாஜக செய்து கொண்ட ‘ரூ. 1000 கோடி ஒப்பந்தம்’, தனது கட்சியை சீர்குலைக்கும் நோக்கத்தைக் கொண்டது. ‘உங்களுக்கு வெட்கமே இல்லையா?’: பெண்களிடம் அநாகரிகமான பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் ‘ரூ. 1000 கோடி ஒப்பந்தம்’ தொடர்பாக பாஜகவை கடுமையாக சாடிய மம்தா

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தொகுதி மறுவரையறை மூலம் வங்காளத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க பாஜக சதி: மம்தா குற்றச்சாட்டு.

தி இந்து:

* தொகுதி மறுவரையறையே முக்கிய பிரச்சினை; பெண்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல என்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்  சோனியா காந்தி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கும் வேளையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் ஒன்றை நடத்தி, அரசு நிறைவேற்ற விரும்பும் மசோதாக்களை அவசர அவசரமாக திணிக்க பிரதமர் முயல்கிறார்; வழக்கம் போலவே, பிரதமர் உண்மையை முழுமையாக வெளிப்படுத்தாமல் மறைத்து வருகிறார் என விமர்சனம்.

* தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு: பல குறியீடுகளில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. சமூகம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு குறியீடுகளில், இம்மாநிலத்தின் செயல்பாடு தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது என்கிறார் கட்டுரையாளர் சாம்பவி பார்த்தசாரதி.

தி டெலிகிராப்:

*வாக்காளர் சிறப்புத் திருத்தம், இந்தியர்களிடையே இரண்டு வர்க்கங்களை உருவாக்கும்’: வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்து பொருளாதார வல்லுநர் பரகல பிரபாகர் மற்றும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கவலை. ‘வாக்களிக்கும் உரிமை ஒரு முறை பறிக்கப்பட்டால், மற்ற உரிமைகளும் பறிக்கப்படும்,’ என்கிறார் பிரசாந்த் பூஷன்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜாதி வாரி கணக்கெடுப்பை நீர்த்து போக வைக்க மோடி அரசு முயற்சி: தற்போது மோடி அரசாங்கம், 334-ஏ பிரிவை திருத்த விரும்புகிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் சில ஆண்டுகளுக்கு கிடைக்காது என்று கூறுகிறது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *