அமெரிக்கா பின்வாங்க முக்கிய காரணம் அவர்கள் எங்கெல்லாம் குண்டு வீசுவோம் என்று கூறினார்களே அந்த அணு மற்றும் அனல் மின் உலைகளைச் சுற்றி ஆயிரக்கணகான மக்கள் ஒன்று கூடி நின்றனர்.
இது ஈரானியர்களின் தன்னெழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.
புஷஹர் அணுமின் நிலையத்தைச் சுற்றி ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என ஆயிரக் கணக்கில் ஈரானின் தேசியக்கொடியை ஏந்தி நிற்கும் ஈரானியர்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இவர்கள் இருவரும் மனித நேயம் கடந்தவர்கள் இவர்களின் இரண்டு ஆண்டுகால நடவடிக்கை மிகவும் கோரமானது, காசாவில் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி அப்பாவி பொது மக்களை கொலை செய்வது முதல் லெபனான் மற்றும் வெஸ்ட் பாங்க் பகுதி மருத்துவமனை முதியோர் குழந்தைகள் இல்லம் போன்றவற்றை எவுகணை மூலம் அழித்தவர்கள் இந்த மக்களின் ஒன்றுகூடலை கண்டு கொள்ளாமல் குண்டுவீசுவார்கள் என்ற நிலை இருந்தும் எங்கள் நாட்டிற்காக நாங்கள் உயிர்விடத்தயார் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி நின்றார்கள். இந்தக்கூட்டத்தின் மீது குண்டுவீசினால் உலகின் போக்கே மாறிவிடும் அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்தை பலமாக பாதிக்கும் என்பதால் போர்நிறுத்தம் என்ற போர்வைக்குள் அமெரிக்கா ஒளிந்து கொண்டது.

