“தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும்
எனது இறுதிமூச்சு உள்ளவரை உழைப்பேன்”
நான் மண்ணில் புதைந்தாலும், என் திட்டங்கள் புதையாது!
சென்னை, ஏப்.10 தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எனது இறுதி மூச்சு இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்’ நான் மண்ணில் புதைந்தாலும், என் திட்டங்கள் புதையாது! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைமலைநகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தொழிற்சாலைகள். எங்கு பார்த்தாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்.
இதை எல்லாம் கொண்டுவந்தது திமுக. நமது ஆட்சி மீண்டும் வந்ததும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மேலும் மேம்படுத்தப்படும். நான் கரோனாவில் போய் இருக்க வேண்டுமென பழனிசாமி பேசியுள்ளார்.
எல்லோருக்கும் மரணம் வரும், இந்த ஸ்டாலினுக்கும் வரும். மண்ணில் புதைப்பார்கள் ஆனால் இந்த ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் போன்ற திட்டங்களை மண்ணில் புதைக்கின்ற துணிச்சல் யாருக்கும் வராது. அவற்றை மண்ணில் புதைக்கவும் முடியாது.
இந்த திட்டங்கள் மண்ணில் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று அர்த்தம். இன்றைக்கு பேசும்போது கரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார் என்றுதான் நான் சொன்னேன் என்று பழனிசாமி பல்டியடித்துவிட்டார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட் டாலும் எப்போதும் களத்தில் நிற்க கூடியவனே திமுககாரன். அதேபோல், தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டாலும் நேரில் சென்று உடனுக்குடன் பார்வை யிட்டு இருக்கிறேன். எனது இறுதிமூச்சு இருக்கும் வரை தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பேன்.
ஆனால், பழனிசாமியிடம் சொல்லு வதற்கு எந்த சாதனையும் இல்லை. கூவத்தூரில் அவர்கள் அடித்த கூத்து நமக்கு மறக்கவில்லை. கூவத்தூர் ஆட்டத்தை பொறுக்காத தமிழ்நாடு, இப்போது பாஜவுடன் சேர்ந்து அதிமுக போடுகிற ஆட்டத்தையா தாங்கிக்கொள்ள போகிறது?
பழனிசாமி அவர்களே, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை காத்திருங்கள். உங்கள் கொட்டத்துக்கு முடிவு கட்டும் தீர்ப்பு அன்று எழுதப்படும். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக வீழ்த்தப்படப் போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
கருநாடக துணை முதலமைச்சர்
கூட்டத்தில் கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசிய தாவது: இந்த பொதுக்கூட்டத்தில் கருநாடக துணை முதலமைச்சராக நான் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தலைமை, முதலமைச்சராக மு.க.ஸ்டாலினுடன் உறுதியாக கைகோத்துள்ளது என்பதை எங்கள் கட்சி தலைவர்கள் மல்லிகார் ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி சார்பில் சொல்லிக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சிறப்பான பணிகளால் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவே அவரை பாராட்டுகிறது. இதை பொறுக்க முடியாமல், தமிழ்நாட்டை அழிப்பதற்கான பணிகளை பாஜக முன்னெடுத்து வருகிறது. ஆனால், அது பலிக்காது.
திமுக தலைமையிலான இந்த கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார். உண்மை யான காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக புதிதாக வந்துள்ள கட்சி (தவெக) ஒன்று சொல்லிக்கொண்டு மக்களை திசை திருப்புகிறது. அகில இந்திய காங்கிரஸ் என்பது ஒன்று தான். அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம்தான் நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

