பி.ஜே.பி. – அ.தி.மு.க. கூட்டணிக்குத் ‘துக்ளக்’கும் சங்கு ‘ஊதி’ விட்டது!

15.4.2026 நாளிட்ட ‘துக்ளக்’ ஏட்டின் அட்டைப் படக் கார்ட்டூன் இது.

இதற்குப் பெரிய விளக்கமெல்லாம் தேவையில்லை.  ‘வேலுமணி– எடப்பாடிஉரையாடல் என்பது – இந்தக் கூட்டணிக்குச் சாவு மணி’ என்பதை ஒப்புக் கொண்டு கடைசி மணி அடித்து விட்டது ‘துக்ளக்’.

வேலுமணி  – சாவுமணி – கடைசிமணி – இவற்றின் கூட்டு மணிதான் ‘துக்ளக்’ போட்டிருக்கும் கார்ட்டூன் அவல மணி!

‘துக்ளக்’ 8, 9 ஆம் பக்கங்களில் என்ன சொல்லுகிறது?

இந்தியா

‘‘தி.மு.க. கூட்டணி வெற்றி – மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்’’ என்று – வேறு வழியின்றி  கடை விரித்தேன் – கொள்வார் இல்லை என்று காட்டிக் கொண்டு ஓரம் போய் விட்டது ‘துக்ளக்’.

தேர்தல் களத்தில் ‘துக்ளக்’ என்ற தலைப்பில் பக்கம் 17, 19, 23, 24ஆம் பக்கங்களில் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் என்ன கூறுகின்றன?

டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தி.மு.க.வுக்கே வெற்றிக் கொடி!

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், ஓமலூர் தொகுதிகளில் தி.மு.க.வுக்கே ஆதரவான நிலை!

இந்தியா

விழுந்து விழுந்து பிஜேபி, அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்த‘துக்ளக்’ கடைசியாக ஒப்பாரி வைத்து சங்கு ஊதி தன் சங்கதியை முடித்துக் கொண்டு விட்டது.

குறிப்பு: பிஜேபி – அ.தி.மு.க. கூட்டணிக்கு அபாய மணி அடித்ததன் மூலம் – ‘வேறு குறுக்கு வழிகளில் எதையாவது யோசனை செய்யுங்கள்’ என்று பிஜேபி மேலிடத்திற்கு சைகை காட்டும் நோக்கமும் இதில் அடங்கியிருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *