15.4.2026 நாளிட்ட ‘துக்ளக்’ ஏட்டின் அட்டைப் படக் கார்ட்டூன் இது.
இதற்குப் பெரிய விளக்கமெல்லாம் தேவையில்லை. ‘வேலுமணி– எடப்பாடிஉரையாடல் என்பது – இந்தக் கூட்டணிக்குச் சாவு மணி’ என்பதை ஒப்புக் கொண்டு கடைசி மணி அடித்து விட்டது ‘துக்ளக்’.
வேலுமணி – சாவுமணி – கடைசிமணி – இவற்றின் கூட்டு மணிதான் ‘துக்ளக்’ போட்டிருக்கும் கார்ட்டூன் அவல மணி!
‘துக்ளக்’ 8, 9 ஆம் பக்கங்களில் என்ன சொல்லுகிறது?

‘‘தி.மு.க. கூட்டணி வெற்றி – மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்’’ என்று – வேறு வழியின்றி கடை விரித்தேன் – கொள்வார் இல்லை என்று காட்டிக் கொண்டு ஓரம் போய் விட்டது ‘துக்ளக்’.
தேர்தல் களத்தில் ‘துக்ளக்’ என்ற தலைப்பில் பக்கம் 17, 19, 23, 24ஆம் பக்கங்களில் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் என்ன கூறுகின்றன?
டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தி.மு.க.வுக்கே வெற்றிக் கொடி!
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், ஓமலூர் தொகுதிகளில் தி.மு.க.வுக்கே ஆதரவான நிலை!

விழுந்து விழுந்து பிஜேபி, அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்த‘துக்ளக்’ கடைசியாக ஒப்பாரி வைத்து சங்கு ஊதி தன் சங்கதியை முடித்துக் கொண்டு விட்டது.
குறிப்பு: பிஜேபி – அ.தி.மு.க. கூட்டணிக்கு அபாய மணி அடித்ததன் மூலம் – ‘வேறு குறுக்கு வழிகளில் எதையாவது யோசனை செய்யுங்கள்’ என்று பிஜேபி மேலிடத்திற்கு சைகை காட்டும் நோக்கமும் இதில் அடங்கியிருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!

