சேலம் உடையாப்பட்டியில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் நினைவுநாள் கூட்டம்

சேலம், ஏப். 9– சுயமரியாதை இயக்கத்தின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுகோட்டை அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சேலம் உடையாப்பட்டி சந்தை மைதானத்தில் 28-3- 2026 அன்று மாலை 6:30 மணி அளவில் நடைபெற்றது.

இக்கூட்டம் அயோத்தி யாபட்டணம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆ ராஜா வரவேற்புரை ஆற்ற, உடையாப்பட்டி கிளைக் கழகத் தலைவர் துரை.அஜித் குமார் தலைமை தாங்க, சேலம் மாவட்டச் செயலாளர் மூணங்கரடு பெ. சரவணன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் துரை. சக்திவேல் இரு வரும் கூட்ட நிகழ்வை ஒருங் கிணைத்தனர்.

சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவரம்பன், மேட்டூர் மாவட்ட தலைவர் ப.க கோவி.அன்புமதி, ஆத்தூர் மாவட்ட கழக செயலாளர் நீ. சேகர், அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. விஜய குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தொடக்க உரை நிகழ்த் தினார்.

ஆத்தூர் கழக மாவட்ட ப.க. தலைவர் வா .முரு கானந்தம் மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா பாலு பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ் பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநில மகளிர் பாசறையின் துணைச் செயலாளர் சேலம் ப.காயத்ரி, மாநில பகுத் தறிவு கலைத்துறைச் செயலாளர் திரைப்பட இயக்குநர் மாரி. கருணாநிதி சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக உடையார்பட்டி கிளைக் கழக செயலாளர் ரா.வெற்றிவேல் நன்றியுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *