திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் இல்ல மணவிழா

1 Min Read

திருச்சி, ஏப். 7- திருச்சி, திரு வெறும்பூர், வேங்கூர் சகாயராஜ் – அஞ்சுகமணி  மகன் இங்கர்சால், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வேப்பூர் பழனிச்சாமி – வள்ளியம்மை  மகள் பவித்ரா ஆகியோரின் வாழ்க்கை இணை யேற்பு விழா  திருச்சி பெல் டவுன்சிப் ‘சி’ செக்டார் திருமண மண்டபத்தில் ஏப்.4 ஆம் தேதி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்,  பெரியார் வீரவிளை யாட்டுக்கழகத் தலைவர் பேரா.ப.சுப்பிரமணியன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து தந்தை பெரியாரின் வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ வேண்டும் என இணையர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இதில் லால்குடி மாவட்டக் காப்பாளர்கள் ப.ஆல்பர்ட்,  தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், லால்குடி மாவட்டத் தலைவர் வீ.அன்புராஜா, விருத்தாச்சலம் மாவட்டக் காப்பாளர் இளங் கோவன், லால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, விருத்தாச்சலம் மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், திருச்சி மாவட்ட செயலாளர் மகாமணி, துறையூர் மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன், விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், கழக பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை. புலிசேசி, தகவல் தொழில்நுட்பக்குழு மாநில ஒருங் கிணைப்பாளர் வி.சி.வில்வம், மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் அம்பிகா கணேசன் மற்றும் கழகத் தோழர்கள், கழக மாவட்ட ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.  நிறைவாக ஆ.பெர்னாட்ஷா நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *