வாசிங்டன், ஏப். 6- ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக் கப்பட்டார். அமெரிக்க மேனாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, காட்சிப் பதிவு ஆதாரங்களையும் வெளி யிட்டு இருந்தனர். இதனி டையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச் சாட்டை எல்லாம் டிரம்ப் திட்ட வட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ஆம் ஆண்டு, அதிபர் தேர்தல் நேரத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது.
அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொ லிக்கவே செய்தது. அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக் கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனி யல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்ட ரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத் தில் நடந்து வருகிறது. இதற்காக மேனாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்பட வில்லை. டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.