தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை வாகனத்தில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை!

2 Min Read

நேற்று (06.04.2026) தமிழர் தலைவர் அவர்கள் தன் தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குவதற்காகத் திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழர் தலைவர் அவர்களின் வாகனத்தை இடைமறித்து, காவல் துறையின் உதவியுடன் சோதனை யில் ஈடுபட்டனர். கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு வழங்கி, பரப்புரையில் ஈடுபடுவதற்கான உரிய ஆவணங்களைக் காட்டினர். சோதனையிடப்படுவதை தேர்தல் ஆணையத்தினர் காட்சிப் பதிவு மூலம் பதிவு செய்துகொண்டனர். பின்னர் சோதனை முடிந்ததும் பிரச்சாரத்திற்கு வழிவிட்டனர்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரை தொடங்கியது (ஆலங்குளம், திருநெல்வேலி – 6.4.2026)

திராவிடர் கழகம்

ஆலங்குளம் சட்டமன்றதொகுதி திமுக வேட்பாளர் பி.எச்.பி. மனோஜ் பாண்டியன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு உரையாற்றினார். கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் பரப்புரைப் புத்தகங்களை திமுக, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

திராவிடர் கழகம்

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சு.சுப்பிரமணியம் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டை ரொட்டிக்கடை மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக வேட்பாளர் சு.சுப்பிரமணியம் அவர்கள் வாக்கு சேகரித்து உரையாற்றினார். கூட்டணியில் உள்ள கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாகத் திரண்டிருந்து தமிழர் தலைவரின் உரையைக் கேட்டனர்.

திராவிடர் கழகம்

*பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்று தேர்தல் பரப்புரை புத்தகங்களை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், மாநகரச் செயலாளர் தினேஷ், பகுதி செயலாளர் சங்கர்.
* திமுக முன்னோடி பாளையங்கோட்டை சுப.சீதாராமன் அவர்களை அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சந்தித்தார். தமிழர் தலைவர் அவர்களை வரவேற்று சுப. சீதாராமன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.
* மேனாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். உடன் பேராசிரியர் காந்திபாபு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *