ரஷ்யா, சீனா எதிர்ப்பு ஹார்மூஸ் நீரிணை தாக்குதல் தீர்மானம் அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி

1 Min Read

வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது மட்டுமின்றி சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஜோர்டான், அய்க்கிய அரபு அமீ ரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அந்த நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா எண்ணெய் கிணறுகளை வளைகுடா நாடுகள் மூடின. இதனால் வளைகுடா நாடுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்களுடன் 10 தற்காலிக உறுப்பினர்கள் என 15 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக உள்ளது. ஏப்ரல் மாதத்தின் தற்காலிக தலைமைத்துவத்தை பஹ்ரைன் ஏற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி போர்ப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் ஹார்மூஸ் நீரிணை திறக்கும் வகையில் பஹ்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.

இதற்கு மற்ற நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *