மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரம் பிள்ளை. சிறுவயதிலேயே தமிழின் மீது கொண்ட பற்றால் முறையாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழறிஞர்களில் தலையாயவராகக் கருதப்படுபவர். திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்துவானாகத் திகழ்ந்தவர். இவரிடம் பாடம் பயிலப் பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் தேடி வருவார்கள்.
உ.வே. சுவாமிநாத அய்யரின் ஆசிரியர் இவரே. உ.வே.சா தனது ‘என் சரித்திரம்’ நூலில், தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஆற்றிய பணிகளை மிக விரிவாகவும் நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் 90-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
பழைய ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுப்பதில் ஆர்வம் காட்டினார், இதுவே பிற்காலத்தில் உ.வே.சா அவர்கள் சுவடிகளைப் பதிப்பிக்க ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
இவருக்கு ‘மகாவித்துவான் என்ற விருது வழங்கப்பட்டன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்த்ததற்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பங்களிப்பு ஈடு இணையற்றது. இன்றும் தமிழறிஞர்களால் ஒரு பெரும் வழிகாட்டியாக அவர் நினைவு கூரப்படுகிறார்.
உரை நடைத் தமிழை எளிமையாக்கியதில் இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
