புதுச்சேரியை கட்டி எழுப்பியது காங்கிரஸ், அழித்தது பா.ஜ.க! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்!

3 Min Read

புதுச்சேரி, ஏப்.6– தேஜ கூட்டணி என்பது ஊழல் மற்றும் கொள்ளையில் செழித்து வளரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதால், புதுச்சேரிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார் காங்கிரஸ் தலைவர் கார்கே.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஊழல் கூட்டணி!

தேஜ கூட்டணி ஊழல் கூட்டணி மாநிலத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும்முற்போக்கு உணர்வை அழிக்க விரும்பும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் தலைமை யிலான சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு. தேஜ கூட்டணி என்பது ஊழல் மற்றும் கொள்ளையில் செழித்து வளரும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவதால், புதுச்சேரிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்குவதே எங்களின் முதல் உத்தரவாதம். இங்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் உள்ளது, மக்கள் அவதிப்படு கின்றனர். நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வளர்ச்சி தடைபட்டுள்ளது. தண்ணீருக்கு பதிலாக மதுபானம் வழங்கும் அரசு மோடி அரசு நிலம் முதல் வானம் வரை, விமான நிலையம் முதல் துறை முகங்கள் வரை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, அதானி என்ற ஒரே ஒருநபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேஜ கூட்டணி மக்களின் நிலம், கோயில் நிலம் போன்றவற்றைக் கொள்ளை யடித்து அபகரிக்கிறது, இது பொதுச் சொத்துத் திருட்டு. புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக அரசு கிட்டத்தட்ட 450 மதுக்கடைகளைத் திறந்துள்ளது, அவர்கள் சுத்தமான தண்ணீருக்குப் பதிலாக மதுபானம் வழங்குகிறார்கள். இங்கு எந்தப் புதிய தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை, ஆறு புதிய மதுபான தொழிற்சாலைகள் வருகின்றன. இது நிலத்தடி நீரை மேலும் வீணடிக்க வழிவகுக்கும்.

புதுச்சேரியில் இளைஞர் களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. மோடி 44 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித் திருந்தார். வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கு முன், மோடி உறுதியளித்த 44 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே போயின என்று நீங்கள் கேட்க வேண்டும். கிரண்பேடி மோடியின் கைப்பாவையாக செயல்பட்டார். புதுச்சேரியை காங்கிரஸ் கட்டியெழுப்பியது, பாஜக அதை அழித்தது. இன்று புதுச்சேரியில் நீங்கள் காணும் அனைத்து வளர்ச்சிகளும் காங்கிரஸ்காரர்களால் செய்யப் பட்டவை.

காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயரை பாஜக மாற்றி வந்தது. அதுதான் மோடியின் பாணி. மோடி புதுச்சேரிக்கு வந்து ‘ரோடு ஷோ’ நடத்தினார் ஆனால் மக்களிடம் பேசவில்லை. மோடி எப்போதும் மக்களின் நலனுக்காக அல்லாமல், ஆர்ப்பாட்டங்களுக்காகவே பணத்தைச் செலவிடுகிறார். மோடி புதுச்சேரியை அதிகார மற்றதாக ஆக்கிவிட்டார். புதுச்சேரிக்கு முழு அதிகாரம் தேவை,  ஆனால் பாஜக அதை விரும்பவில்லை.

நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோது, பாஜக ஆளுநர் கிரண் பேடியைத் தலையிடப் பயன்படுத்தியது. அப்போது ஆளுநர், மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டார்.

ரூ.2500 மதிப்புள்ள உணவு பொருட்கள்

உங்கள் வாக்கு உங்கள் சக்தி, அதை உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்துங்கள், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன் படுத்துங்கள், புதுச்சேரிக்கு அது தகுதியான அரசை வழங்கப் பயன்படுத்துங்கள்.

தூய்மையான ஆட்சி, பாதுகாப்பு மற்றும் மாநிலத் தகுதிக்கான நியாயமான விருப்பத்திற்காக காங்கிரஸ் கட்சியும் ‘இண்டியா’ கூட்டணியும் உங்களுடன் துணை நிற்கின்றன. காங்கிரஸ் உங்கள் உரிமைகளுக் காகப் போராடும். பாஜக மக்களிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பறிக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தொடக்க நிலை முதல் ஆராய்ச்சி நிலை வரை இலவசக் கல்வி, மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 கல்வி உதவித்தொகை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,500 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *