செயற்கை நுண்ணறிவால் அறிவாற்றல் அழியுமா? எம்.அய்.டி. கவலை

புதுடில்லி, ஏப்.5 அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மாசேசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) குறித்த 2 ஆய்வறிக்கைகளை அண்மையில் வெளியிட்டனர். அவை செ.நு. குறித்த கவலைகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளன.
நாம் பயன்படுத்தும் சேட்ஜிபிடி ஜெமினி போன்ற செ.நு.செயலிகள் எப்போதும் நம் கருத்தை ஆமோதிப்பது போல பதிலளிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் இதை Sycophancy என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் முகஸ்துதி செய்தல். எம்.அய்.டி. ஆராய்ச்சி யாளர்கள் செய்த முதல் ஆய்வில் தெரிய வருவதாவது, ஒரு பயனர் ஒரு கருத்தைச் சொன் னால், செ.நு. அதைச் சரி என்று பாராட்டி வழிமொழிகிறது. இதனால் அந்தப் பயனர் தனது தவறான கருத்தையும் மிகச்சரி யானது என்று நம்பத் தொடங்குகிறார்.
தொடக்கத்தில் நடுநிலையாக இருக்கும் ஒரு பயனர், செ.நு.வின் தொடர் ஆமோதிப்பால் இறுதியில் ஒரு தவறான கருத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவராக மாறுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செ.நு. செயலிகள் பயனர்களுக்குப் பிடிக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவியாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப பதிலளிக்கும் போது அவற்றுக்கு வெகுமதி கிடைப்பதால், அவை பயனரைத் திருத்துவதற்குப் பதிலாக அவர்களைத் திருப்திப்படுத்த முயல்கின்றன.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு ஆய்வு இதைவிட ஆபத்தான ஒன்றை சுட்டிக்காட்டுகின்றன. அதாவது, செ.நு. மிக எளிதாகப் பதில்களைக் கொடுப்பதால், மனிதர்கள் தாங்களாகவே தேடிப் பார்க்கும் அல்லது மற்றவர்களுடன் விவாதிக்கும் பழக்கத்தைக் கைவிடுகின்றனர். பொதுவாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதன் மூலமே அறிவு வளரும். ஆனால், செயற்கை நுண்ணறிவிடம் மட்டுமே பதில்களை எதிர்பார்ப்பது இந்தச் சங்கிலியை உடைத்துவிடும்.
எதிர்காலத்தில் செ,நு. துல்லியமான பதில்களைத் தந்தாலும், அதைச் சிந்தித்துப் பார்க்கும் அல்லது கேள்வி கேட்கும் மனிதனின் பொது அறிவு மழுங்கிப்போகும் ஆபத்து உள்ளது. இது மனிதர்களை கற்காலத்திற்கு இட்டுச் செல்லும் அபாயத்தை தன்னகத்தே கொண் டுள்ளது என்பதே ஆய்வாளர்களின் அச்ச மாக உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *