மக்கள் எதிர்ப்பு எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு

2 Min Read

இஸ்லாமாபாத், ஏப். 5- நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிர்ந்தார்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை பன்னாட்டளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானில் ஏப்.3 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.

இந்த விலையேற்றத்தை பாகிஸ்தான் நாட்டு ரூபாயின் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.458.41 மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.520.35-க்கும் விற்பனை ஆனது. ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்தது. இது மக்களை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில், நேற்று பின்னிரவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். அவரது 7 நிமிட உரையாடலில், “பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.458 என விற்பனை ஆகிறது. இந்த நிலையை சற்று சீராக்கும் வகையில் பெட்ரோல் விலையை 80 ரூபாய் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.378 என விற்பனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேற்காசிய போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை போருக்கு முந்தைய நிலையை நாட்டில் எட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் மற்றும் முக்கிய பிராந்தியங் களான பஞ்சாப், சிந்த் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கட்டணம் செலுத்தாமல் பேருந்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ஒரு மாத காலம் நடைமுறையில் இருக்கும் என தகவல். இருப்பினும் ரயில் பயண கட்டணத்தில் அங்கு மாற்றம் ஏதும் அறிவிக்கப் படவில்லை.

வளைகுடா வாழ முடியாத
இடமாக மாறும் அபாயமா?

வாசிங்டன், ஏப். 5- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலை அதிகரித்ததை தொடர்ந்து, இரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில், ஓர் இந்திய தொழிலாளர் உயிரிழந்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் அங்குள்ள மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா நாடுகள் ஈரானின் பதிலடி தாக்குதல்களை சந்தித்து வருகின்றன.

மத்திய கிழக்கின் இந்த பகுதி மிகவும் வறண்டது. இங்கு வாழ்வதற்காக மின் நிலையங்களும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களும் மிக அவசியமானவை.

குடிநீரின் சுமார் 90% சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரிலிருந்தே கிடைக்கிறது.

கடல் நீரை குடிநீராக்கும் செயல்முறை பாதிக்கப் பட்டால், வளைகுடா பகுதி விரைவில் வாழ முடியாத இடமாக மாறும் அபாயம் உள்ளது.

இதுவே அந்தப் வளைகுடாப் பகுதித் தலைவர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *