6.4.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய அரசு வரலாற்றை உருவாக்கட்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை ஒப்புக் கொள்ளவும் வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலங்கள் சட்ட உதவிக்கான பட்ஜெட் ஒதுக் கீட்டை அதிகரித்தாலும், சட்ட உதவி கிளினிக்குகள் 2019 முதல் 2021 வரை 44 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய நீதி அறிக்கை (மியிஸி) 2022 தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
* நரேந்திர மோடி அரசாங்கம் சிறு வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏகபோகங்களை உருவாக்கி, பொருட்களின் விலைகள் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்ததற்கு வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டு பேரில் நிரூபணமாகியுள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இத்தகைய சலுகைகளுக்கு ஈடாக, மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
மீடியா ஒன் மீதான தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது, அரசாங்க கொள்கை மீதான விமர்சனம் ஸ்தாபனத்திற்கு எதிரானது அல்ல என்றும் தீர்ப்பளித் துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகார் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் துணைப் பிரிவுகளை ஒரே சமூக அமைப்பாக இணைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது,
– குடந்தை கருணா