பெங்களூரு, ஏப்.5- மேற்குவங்க மாநில தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரசும், தமிழ்நாட்டில் திமுகவும் வெற்றி பெறும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
தாவணகெரே, பாகல்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ள சித்தராமையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘காங்கிரசில் வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்படுகிறது என்று பாஜக குற்றம் சாட்டுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்துபோனால், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு சீட் கொடுப்பது வழக்கமான நடைமுறை. அதைத்தான் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.
இடைத்தேர்தலில் 2 தொகுதி களிலும் நாங்கள் வெற்றி பெறுவது 100 சதவிகிதம் உறுதி. சிறுபான்மையினர் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். அவர்கள் பா.ஜ.க.விற்கோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களுக்கோ ஆதரவளிக்கமாட்டார்கள். கருநாடகாவில் தலைமை மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும்’ என்றார்.
மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, ‘அசாம் உள்ளிட்ட தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற முடியாது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெறும். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும்’ என்று கூறினார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெறும்! கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி!
Leave a Comment
