மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க முடிவு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.4 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 816ஆக அதிகரித்து, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வரும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டில்லியில் செய்தியாளா்களிடம் நேற்று (3.4.2026) பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தோ்தல் நடைபெற வுள்ளது. இந்தத் தோ்தலில் அரசியல் ஆதாயம் அடையும் நோக்கில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடா்பான சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, தொகுதி வரையறை தொடா்பான மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவைகளுக்கான தொகுதிகளை மறுவரை செய்வது தொடா்பான மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசு அவசரப்படக் கூடாது. இது மிகவும் முக்கியமான விவகாரம். இதை மிகவும் எச்சரிக்கையுடன் அரசு கையாள வேண்டும். அவசர கதியில் மறுவரை செய்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கு அது பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

மக்களவையில் தற்போது உள்ள உறுப்பினா்கள் எண்ணிக் கையில் மாற்றத்தையோ அல் லது எண்ணிக்கையை அதி கரிப்பதையோ காங்கிரஸ் விரும்பவில்லை. மகளிா் இடஒதுக்கீடு சட்ட விவகாரத்தில் 30 மாதங்களாக ஒன்றிய அரசு தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவிருப்பதால், அதில் ஆதாயம் அடைய ஒன்றிய அரசு விரும்புகிறது. தொகுதி மறுவரை செய்வது தொடா்பாக ஒன்றிய அரசிடம் இருந்து இதுவரை அதிகாரபூா்வமாக அறிவிப்போ அல்லது திட்டமோ வெளியிடப்படவில்லை. ஆனால் அதிகாரபூா்வமில்லாத தகவல்கள், மக்களவையில் தொகுதிகள் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் தெற்கு, வடகிழக்கு, மேற்கு இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும்.

புதிய மசோதாவால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 120-ஆக அதிகரிக்கும். அதேவேளையில் கேரளத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து விடும். தமிழ்நாடு மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல்களில் ஆதாயம் அடைவதே அரசின் எண்ணம். அந்த எண்ணம் இல்லையேல், ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு செய்யலாமே? இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிா்க்கட்சிகளும் கடிதம் எழுதியுள்ளன.

முன்பு சிறப்பு கூட்டத் தொடரை ஏப்ரல் மாத தொடக் கத்தில் கூட்ட அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அதை கைவிட்டுவிட்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் நடக்கும் நாள் களில் கூட்டியுள்ளது என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *