சட்டமன்றத் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.கழக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று (3-4-2026) காலை 7 மணிக்கே 142 அ வட்டத்தில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்து, சால்வை அணிவித்தும், கைத்துண்டுகள் அணிவித்தும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, வட்டக் கழக செயலாளர் எஸ்.பி.கோதண்டம், சைதை சாதிக், ஜோதிபொன்னம்பலம், ம.ஜேக்கப், பாண்டுரங்கன், ப.சுப்பிரமணி, ஆனந்தன், அபுதாகிர், சிவா, சாகுல்அமீது, கதிர், கதிர், அப்துல் கலாம் உள்ளிட்ட ஏராளமான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *