நிர்வாகம் என் கையில் இல்லை மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க. சதி மம்தா குற்றச்சாட்டு

2 Min Read

மால்டா, ஏப். 4- மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டதாகக் குற்றம் சாட்டி 1.4.2026 அன்று வாக்காளர் பட்டியல் மறுஆய்விற்கு வந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை 9 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சிறைபிடித்தனர்.

இரவு 1 மணியளவில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களைக் கலைத்து, நீதித்துறை அதிகாரிகளை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீதித்துறை அதிகாரிகள் மீட்கப்பட்டபோது அவர்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அதிகாரிகள் பாதுகாப் புக்கு ஒன்றிய படை யினரை நிலைநிறுத்த உத்தரவிட்டனர்.

இந்நிலையில் 2.4.2026 அன்று சாகர்திகியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தா, “அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இது தொடர்பாக யாரும் எனக்கு தகவல் கூட அளிக்கவில்லை.

நள்ளிரவில் ஒரு பத்திரி கையாளர் மூலமாகவே எனக்கு இது குறித்து தெரியவந்தது.

தற்போது நிர்வாகம் என் கையில் இல்லை. எனது அதிகாரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கைகளுக் குச் சென்றுவிட்டன.

தேர்தல் ஆணையமே சட்டம் ஒழுங்கைக் கட்டுப் படுத்துகிறது. அவர்கள் அனைவரும் அமித் ஷாவின் பேச்சைக் கேட்டு நடக்கின்றனர்.

தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தலைமை இயக்குநர், காவல் ஆணையர், மாவட்ட நீதிபதிகள், காவல் கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் மாற்றப்பட்டு உள்ளனர்.

ஒருபுறம் உள்துறை அமைச்சரும் மறு புறம் ஆளுநரும் வர வழைக்கப்பட்டு சட்ட மன்றத் தேர்தலை ரத்து செய்துவிட்டு இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடத்த பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.

மால்டாவில் அதிகாரிகள் கைது செய் யப்பட்டது பாஜகவின் சதியின் ஒரு பகுதி. அவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு தேவை குடியரசு தலைவர் ஆட்சியா, இல்லை திரிணாமுல் ஆட்சியா? மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *