
காரைக்குடி, ஏப்.4- காரைக்குடியில் நடை பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மேனாள் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரசு கட்சி வேட்பாளர் சா.மாங்குடியை அறிமுகப் படுத்தி ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நிதிஷ்குமார் நீண்ட நாட்களுக்கு முதல மைச்சராக இருக்க மாட்டார் என்று நான் அன்றே சொன்னேன். மாநில கட்சிகளை பயன் படுத்திவிட்டு தூக்கி எறிவ்துதான் பாஜகவின் பழக்கம். அதேபோல் அதி முகவையும் தூக்கி எறிந்து விடுவர்.
இந்த நேரத்தில் 2 கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. அது தமிழ்நாடு கலாச்சாரத்துக்கும், வடமாநில கலாச்சாரத் துக்கும் இடையேயான மோதல். ஸநாதனம் நல்ல பெயராக கருதப்படலாம். அதை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
ஸநாதனம் விரும்பு வோர் விரும்பட்டும். சைவ உணவை சாப்பிடுபவர் சாப்பிடட்டும். சமஸ் கிருதம் ஆதி மொழி என நம்புவோர் நம்பட்டும். ஆனால், அதற்காக மற்ற வர்களிடம் திணிக்கக் கூடாது.
அதிமுகவை தோற் கடிக்க வேண்டும் என்பதைவிட, பாஜக நுழைந்துவிடக் கூடாது என நினைக்க வேண்டும். பாஜக வந்துவிட்டால் தமிழ்ப் பண்பாடு, வரலாறு எல்லாம் புதைக்கப்படும்.
இது கட்சி, அணிக் கான போட்டி கிடையாது. கொள்கை, பண்பாடு, கோட்பாடுக்கான போட்டி.
தமிழ்நாட்டில் பாஜக வந்தால் ஆதிக்க சக்திகள் வந்துவிடும். அதிமுக வால் பாஜகவை ஒரு அங்குலம் கூட மீற முடியாது. அதிமுக வெறும் முகமூடிதான்; பாஜக தான் முகம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாநகர தலைவர் ந.ஜெக தீசன் மற்றும் கழகத் தோழர்கள் காங்கிரசு கட்சி வேட்பாளர் சா.மாங்குடி, மேனாள் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர்க்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

