தமிழ்நாடு முழுவதும் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அறிஞர் அண்ணா சிலை அருகே அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.மு. தர்மராசு அனைவரையும் வரவேற்றார். திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தொடக்க உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.சரவணன், மாவட்ட கழக ச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் கழகப் பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு சிறப்புரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர், மாவட்ட இணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, திருமயம் ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன், ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், நகர அமைப்பாளர் பி.சேகர், க.மாதவன், பெரியார் பெருந்தொண்டர் செ.ராஜேந்திரன், அ.வெண்ணிலவு செந்தூரப் பாண்டியன், விடுதலைச் செய்தியாளர் கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், 27.3.2026 அன்று மாலை இல்லற வாழ்க்கைத் துணை ஏற்று அடுத்த நாளே புதுக்கோட்டையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் வாழ்விணையரோடு வந்து கலந்து கொண்ட செந்தூரபாண்டியன், வெண்ணிலவு இணையர்களைப் பாராட்டி, கண்ணன் வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை பரிசளித்து வாழ்க்கைத் துணை ஏற்று, ஒரே நாளில் பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்தார்.
கானாடுகாத்தான், காரைக்குடி
காரைக்குடி கழக மாவட்டம் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சான் அஞ்சான் அழகிரி அவர்களின் 77வது நினைவு நாள் பரப்புரை கூட்டம் மாவட்ட தலைவர் வைகறை தலைமை யில், மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல் முன்னிலையில் நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் சி செல்வமணி வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டத்தின் தலைவர் வைகறை தனது உரையில் சுயமரியாதை இயக்கத்தின் தளபதிகளில் முதன்மையானவராக தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரியவராக எவ்வித சபலங்களுக்கும் ஆளாதவராக, துணிச்சல் மிக்க வீரராக களப்பணி ஆற்றினார் என்பதையும், அவருடைய மேடை மொழி தான் அறிஞர் அண்ணாவிற்கும், முத்தமிழறிஞர் கலைஞருக்கும், திராவிடர் இயக்க முன்னோடிகளுக்கும்

கம்பீர உரை நிகழ்த்த வழிகாட்டியாக அமைந்ததையும், தமிழ் நாடெங்கும் நடைபெறும் இந்த பரப்பரைக் கூட்டம் கானாடு காத்தானில் நடைபெறுவது மிகுந்த பொருத்தமானது என்று எடுத்துரைத்தார்,

சிறப்புயாற்றிய கழகச் சொற்பொழி வாளர் மாங்காடு மணியரசன் தனது உரையில்” நூறாண்டுகளுக்கு முன்னர் சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கும் தனி தண்ணீர்ப் பானை, தனி உணவு என்கிற கொடுமையை எதிர்த்து போராட தந்தை பெரியார் தலைமையில், முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் இந்த கானாடுகாத்தானில் தான் சுய மரியாதை வீரர் வை.சு. சண்முகம் அவர்களது இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள், இங்கே நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலத்தில் நாதஸ்வரம் வாசித்துச் சென்ற மதுரை சிவக்கொழுந்து நாகசுரக் கலைஞர் தோளில் போட்டிருந்த துண்டை இடுப்பில் கட்டச் சொல்லி ஆதிக்க ஜாதியினர் கூச்சலிட்டபோது “துண்டை இடுப்பில் கட்டாதே தோளில் போடு” இன்று உரக்கச் சொல்லி சுயமரியாதை உணர்வை மீட்டெடுத்த வரலாற்றை மிக அழகாக எடுத்துரைத்தார். சுயமரியாதை இயக்கத்தில் அவர் ஆற்றிய பணிகளையும், திராவிடர் கழக மாநாடுகளில் தன் உடல் நலனைப் பற்றி கவலை கொள்ளாது, தமிழர் வாழ்வின் இழிநிலையைப் போக்க எதிர்த்தோரை எல்லாம் தன் பக்கம் ஈர்த்த அஞ்சா நெஞ்சர் அழகிரி! 1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர் படையின் தலைமை ஏற்று உறையூரில் இருந்து சென்னை வரை நடைபயணமாக பரப்புரை மேற்கொண்ட வரலாற்றை, இன்றைக்கு இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் சுயமரியாதை உணர்வில் உயர்ந்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சிக்குஅடித்தளம் இட்டவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி என்று சிறப்பாக உரையாற்றினார்.
கல்லல் ஒன்றிய தலைவர் ஆ.சுப்பையா நன்றி உரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் செல்வம் முடியரசன், காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், மாநகர துணைத் தலைவர் ஆ.பழனிவேல் ராசன், தேவகோட்டை நகர தலைவர் வீ.முருகப்பன், தேவகோட்டை ஒன்றியச் செயலாளர் அ.ஜோசப், தி. தொ. க தலைவர் சி சூரியமூர்த்தி, மு வெங்கடேசன், சூரக்குடி மணிவண்ணன், பெரியார் பிஞ்சு செ. அன்பரசு மற்றும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் ஆகியோர் பங்கேற்றனர்.
கிருட்டினகிரி
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77 -ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரை கருத்தரங்கம் கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவு நாளையொட்டி 28/3/2026 – சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் எழுச்சியுடன் வெகு சிறப்பாக நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன்,மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.சிலம்பரசன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊற்றங்கரை ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராம. சகாதேவன் தொடக்கவுரையாற்றினார்.
கருத்தரங்க சிறப்புரை
மாநில பகுத்தறிவாளர் கழக துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் பேசியதாவது:- பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் தந்தை பெரியார் கொள்கை வழியில் பெரியார் 1925இல் காங்கிரஸ்சை விட்டு வெளியேறிய போது, பெரியார் ஜாதி ஒழிப்புக்கான சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், இந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர் அழகிரி அங்கும் பெரியார் கொள்கைப் பிரச்சார பணியை மேற்கொண்டவர். இங்கு நீங்கள் பெரியார் கொள்கை பணியை செய்யக்கூடாது என்று கூறியதால் அந்த பணியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியவர், பெரியாரின் பெரும் பணியை எனது முதன்மை பணி என்று எங்கும் யாருக்கும் அஞ்சாமல் தான் கொண்ட கொள்கையில் துணிவுடன் நின்று செயலாற்றியவர் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் போராட்ட வரலாற்றுப் பதிவுகளை எடுத்துக் கூறினார். பெரியார் கொள்கை வழியில் 1928இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பேசும்போது மயக்கம் அடைந்து கீழே வீழ்ந்தார். மயக்கம் தெளிந்து மீண்டும் எழுந்து பேசுகிறார் அஞ்சாநெஞ்சன் அழகிரி என, அவரது போராட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் இல. ஆறுமுகம், கி.முருகேசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் செ.வீரபாண்டி, மாணவர் கழக பு.கு.மகிழன், துணைச் செயலாளர் மா.ரூபிகாசிறீ, பெரியார் பிஞ்சுகள் கா.ஆ.நிறை தமிழ், கா.ஆ.நிறை கதிர் உள்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கிருட்டினகிரி நகர கழகச் செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.
திருப்பத்தூர்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77 ஆண்டு நினைவேந்தல் கூட்டம் திருப்பத்தூர் நகu சாகித்ய அகாடமி உள்ளரங்கில் 28.03.2026 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு கே. சி. எழிலரசன் (மாவட்டத்தலைவர்) தலைமை வகித்தார். மோ. நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார். பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) தொடக்க வுரையாற்றினார்,அஞ்சா நெஞ்சன் வாழ்க்கை குறிப்பையும், வரலாற்று நிகழ்வையும் குறிப்பிட்டு பேசினார். மேலும் நா.சுப்புலட்சுமி, எம்.என்.அன்பழகன் (மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்) வெ.அன்பு (மாவட்ட தலைவர் ப.க) ஆகியோர் பட்டுக்கோட்டை அழகிரி குறித்து சிறப்பான முறையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி பேசினர். இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) சிறப்புரையாற்றினார். அவர் தம் இறுதி நாட்களில் காசநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் இச்சமூகம் மேம்பட வேண்டும் என்பதற்காக தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர் பட்டுக்கோட்டை அழகிரி என்று அவரை குறித்த பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்வில் தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்), காளிதாஸ் (நகர தலைவர்), எம். ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்), கோ.திருப்பதி (மாவட்டச்செயலாளர் ப.க.) மோ.நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), கே.மோகன் (மாவட்ட தலைவர், பெ.கட்டுமான தொழிலாளரணி), க.நிரஞ்சன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்), மு.வெற்றி (மாதனூர் ஒன்றியத் தலைவர்) சே.வெங்கடேசன் (மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கோ. சங்கர் (சுந்தரம்பள்ளி கிளைத் தலைவர்) சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத் தலைவர்) லட்சுமணன் (லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்) பிரபாகரன் (கற்பிபயிலகம்) ஆகியோர் பங்கேற்றனர்.
ப.அன்பு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) நன்றியுரையாற்றினார்.
காஞ்சிபுரம் வாலாஜாபாத்
காஞ்சிபுரம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் 28.3.2026 அன்று மாலை அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆ மோகன் தலைமை தாங்கினார், மாவட்ட மகளிரணித் தலைவர் அ.ரேவதி வரவேற்புரையாற்றினார், மாவட்ட செயலாளர் கி. இளையவேள், மாவட்ட பக தலைவர் பா. இளம்பரிதி, செயலாளர் அ வெ சிறீதர், மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அ.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சி உலகஒளி, சம்பத்குமார் ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடிய பின் விசிக பாசறை செல்வராஜ், தமிழ் உரிமை கூட்டமைப்பு காஞ்சி அமுதன், கவுன்சிலர் கலைவாணி, தோழர் இரவி பாரதி, தன்னாட்சி தமிழகம் பெ. பழனி, அறிவு வளர்ச்சி மன்றம் நிறுவனர் நாத்திகம் நாகராசன், மாவட்ட தலைவர் அ வெ முரளி ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முத்தாய்ப்பாக உத்திரமேரூர் திமுக சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அறிவிக்கப்பட்ட அய்ந்து மணி நேரத்திற்குள்ளாக முதல் அறிமுக பரப்புரையை தொடங்கினார்.
திமுக, தேமுதிக, மதிமுக, விசிக, காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சி, முஸ்லிம் லீக் தோழர்களும் படப்பை தோழர் சந்திரசேகரன், அரும்பாக்கம் தாமோதரன், தஞ்சை பக மாவட்ட தலைவர், விசிக அசோக் குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண்டனர். நிறைவாக வாலாஜாபாத் ஒன்றிய கழக அமைப்பாளர் ஓய்வு பெற்ற கிராம அலுவலர் எஸ். செல்வம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
