கன்னியாகுமரி, ஏப். 3- குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கன்னியாகுமரி மலங்கரை பவன் கெஸ்டவுஸில் எழுச்சிகரமாக நடைபெற்றது. குமரி நகர கழக செயலாளர் யுவான்ஸ் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். கழக காப்பாளர் ம.தயாளன், பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவு ரையாற்றினார்.
கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளக்கவு ரையாற்றினர்.
திராவிட மாணவர் கழக மாநில இணைச்செயலாளர் மு.இளமாறன் விரிவாக சிறப்புரையாற்றினார் பெரியார் பெருந்தொண்டர் மு.பால்மணி, சி.அய்சக் நியூட்டன், மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர் மஞ்சு குமாரதாஸ், திராவிட மாணவர் கழக தோழர் இரா.முகிலன், திமுக தோழர்கள் கவுன் சிலர் டெல்பின் ஆன்டனி மற் றும் ஏராளமான தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாசிச மதவாத பாஜகவையும் அதன் அடிமை கட்சி அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும். மீண்டும் மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சி அமைய திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது உழைக்க பாடுபடவேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.குமார தாஸ் நன்றி கூறினார்.
