மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 3)

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அப்பாவி வேசம்

ஒருத்தர் ஒரே நேரத்தில ரெண்டு தொகுதிகள் வரை போட்டியிடும் வாய்ப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுக்குது. ரெண்டிலும் ஒருவர் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியைப் பிறகு ராஜினாமா செய்யலாம்ங்கிறது சட்டம்.

234 தொகுதியில எங்க நின்னாலும் ஜெயிப் பாரு. 234 தொகுதியிலயும் அவர் ஒருத்தரே நின்னாலும் ஜெயிப்பாருன்னாங்க…

இப்போ ரெண்டு தொகுதியில நிக்கிறாரு அந்த நடிகர்.

“ஏம்ப்பா பயமா?”ன்னு கேட்டா…

“ஏன் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி மட்டும் ரெண்டு தொகுதியில நிக்கலையா?”ன்னு நம்மையே திருப்பிக் கேட்கிறாங்க.

ரெண்டு தொகுதியா? இதென்ன புதுசா இருக்குன்னு யோசிச்சா… டக்குன்னு சொல்றாங்க…

“சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – ரெண்டு தொகுதி தானே!”ங்கிறாங்க…

அட தற்… வேண்டாம்.. அட ஆச்சரியக் குறிகளா! “சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி”ங்கிறது ஒரே ஒரு தொகுதியோட பெயர் தான்னு தெரியாமல் அரசியல்ல குதிக்கிறோம்னு சொல்ற உங்களை என்ன பண்றது?

சரி, ரெண்டு தொகுதியிலயும் வேட்பு மனுத் தாக்கல் பண்ணுனாரே அந்த நடிகர். ரெண்டுலயும் என்ன விவரம் இருக்குன்னு பார்த்தா…

பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில, என் மேல எந்தக் குற்றவியல் வழக்கும் இல்லைன்னு போட்ருக்காரு… ஆனா திருச்சி கிழக்கு தொகுதியில கொடுத்த வேட்புமனுவில “மதுரை கூடக்கோவில் போலீஸ் ஸ்டேஷன்ல வழக்கு எண் 108/2025 இருக்கு. அது எனக்குத் தெரியாது”ன்னு புதுசா போட்டிருக்கீங்க. (பெரவள்ளூர் வழக்கு லேட்டஸ்ட்டு. அதை விட்டுடுவோம்.)

உண்மையிலேயே தெரியாதா? இதை நாங்க நம்பணுமா?

இல்ல… ஒரு தொகுதியில வேட்பு மனு நிராகரிக் கப்பட்டா… அதை வச்சு “சி.எம்.சார்… ஏன் சார் என் வேட்பு மனுவை ரத்து பண்ணுனீங்க… பயமா சார்!”னு விக்டிம் பிளே பண்றதுக்கான வேலையா?

ஏன்னா… தேர்தல் ஆணையம் வேட்பு மனுவை நிராகரிச்சாலும், அதை நீங்க மாத்தி பொய்யச் சொன்னாலும், விசிலடிச்சான் குஞ்சுகளுக்குப் புரியவா போகுது?ங்கிற தைரியம் தானே!

தனக்கு ஓட்டுப் போடுபவர்கள் எல்லோரும் ஏமாளிகள்தான்; அதனால் என்ன வேணும்னாலும் பேசலாம்-ங்கிற தைரியம் இந்தியாவில பி.ஜே.பிக்குத் தான் இருந்தது. அறிவாளிகளையோ, கேள்வி கேட்கிறவங்களையோ பத்தி அவங்க கவலையே பட மாட்டாங்க! அதற்குப் பிறகு உங்களுக்குத் தான் அந்த நம்பிக்கை!

எல்லா வேட்பு மனுக்களும் இணையத்தில ஏற்றப்படும்னு உங்களுக்குத் தெரியுமா – தெரி யாதா? உங்க குடும்பத்துக்குள்ளேயே எல்லோ ருக்கும் கடன் கொடுத்த விவரம் வரைக்கும் வெளியே வரும்னு தெரியுமா? தெரியாதா?

சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? Ignorance of law excuses no one.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *