விஜய் உபயம் : திருச்சி தேர்தல் பிரச்சாரத்தால் இடையூறு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்

1 Min Read

திருச்சி, ஏப்.3  திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தால் இடையூறு ஏற்பட்டதால், அதன் அருகில் இருந்த அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுத லாக 30 நிமிடங்கள் அவகாசம் வழங் கப்பட்டது.

விஜய் பிரச்சாரம்

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக த.வெ.க. தலைவர் விஜய், பாலக்கரை பழைய மதுரை சாலையில் உள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் நேற்று (2.4.2026) வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், அதன் அருகில் உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் பிற்பகல் 12.30 மணியளவில் வேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்தார். இதற்காக நேற்று (2.4.2026) காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

விஜய் பிரச்சாரம் செய்த இடம் அருகே சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளி உள் ளது. இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 170 பேர் நேற்று (2.4.2026) பொதுத்தேர்வு எழுதினர். இத்தேர்வுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக விஜய் வருகைக்கு முன்னதாக ஸ்பீக்கர் பயன்படுத்தக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி யிருந்தனர்.

அதேவேளையில், விஜய் அங்கு பிரச்சாரத்துக்காக வந்த போது ஸ்பீக்கர் மூலம் த.வெ.க. பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. விஜய் அங்கு சுமார் 20 நிமிடங்கள் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார். இதனால் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாண வர்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

30 நிமிடம் கூடுதல் அவகாசம்

இதையடுத்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.சரவணனிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அனுமதி பெற்று அந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக 30 நிமிடம் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கினார். இதையடுத்து பிற்பகல் 1.15 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு 1.45க்குதான் முடிந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *