மருத்துவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

1 Min Read

சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக 25 லட்சம் ரூபாய் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ள  நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   தமது சமூக வலைதளப் பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப்பதிவு வருமாறு:–

சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தி யாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன்!

இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில்,

  • மருத்துவக் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்வு
  • சென்னை, காஞ்சிபுரம் போன்று, பிற வட்டாரங் களிலும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள்
  • தஞ்சாவூர், தருமபுரி, விழுப்புரத்தில் உயர்சிறப்பு மருத்துவமனைகள்
  • மண்டல அளவில் கருத்தரிப்பு மையங்கள்
  • மாவட்ட & வட்ட அளவிலான மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை
  • இருமடங்காக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை #StalinStatement என வழங்கியிருக்கிறேன்!

நலமான தமிழ்நாடு 2030–க்கு வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது, சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *