தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு நவீன கருவியை பொருத்தி மறுவாழ்வு அளித்தனர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

1 Min Read

சென்னை, ஏப்.3 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன், மருத்துவ கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியின்  மகள் 14 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட் டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அந்த பிரச்சினை சரியாகவில்லை. இந்நிலையில், மகாராட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு நியூரோ ஜெனிக் ப்ளேடர் எனப்படும் சிறுநீர்ப் பை செயலிழப்பு பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். நரம்பு மண்ட லங்களில் ஏற்படும் சேதத்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

நரம்புகளை முடுக்கி விடும் நியூரோ மாடுலேஷன் தெரபி சிகிச்சை தான் இதற்கு ஒரே தீர்வு ஆகும். இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்துவதை போன்று, நரம்புகளின் செயல் பாட்டை சீராக்க நியூரோ மாடு லேஷன் சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும்.

இதற்கு அந்த தனியார் மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப் பட்டார். இதையடுத்து, சிறுமிக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

15 ஆண்டுகள் செயல்படும்

தொடர்ந்து, ரூ.7.5 லட்சம் மதிப்பிலான மின் முடுக்கி உபகரணம் சிறுமியின் உடலில் பொருத்தப்பட்டது. 15 ஆண்டுகள் செயல்படும் அந்த கருவி மற்றும் அதற்கான சிகிச்சை செலவை அரசு ஏற்று கொண்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.

மகளை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *