தமிழ்நாடு முழுவதும் 28.3.2026 அன்று அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:
மதுரை
மதுரை மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில் மார்ச் 28மாலை 6 மணிக்கு பகுதி கழகப்பொறுப்பாளர்களால் சிறப்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ் தலைமை ஏற்றார்.

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ், மாவட்ட பக தலைவர் ச.பால்ராஜ், செயலாளர் வீர.பழனிவேல் ராஜன், திமுக முன்னோடி சண்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர் சுப. முருகானந்தம் தொடக்க உரையாற்றினார். அதற்கு முன்பாக மாவட்டக் காப்பாளர் சே முனியசாமி தமிழர் தலைவர் அவர்கள் விடுதலையில் தளபதி அழகிரி குறித்து எழுதி வரும் கட்டுரையை மேற்கோள் காட்டி உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் இரா. திருப்பதி தற்போது களத்தில் பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் வியாபாரியை தோலுரித்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொழிலாளர் கழக இணை செயலாளர் மகபூஜஹான் அழகிரிக்கு புகழாரம் சூட்டினார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் இராம. வைரமுத்து
செட்டிநாடு திருமணநிகழ்வில் மதுரை சிவக்கொழுந்துக்கு ஏற்பட்ட சம்பவத்தை எடுத்துச்சொல்லி அழகிரியும் தந்தை பெரியாரும் எடுத்த முடிவால் சிவக்கொழுந்து தோளில் துண்டு அணிந்து வாசித்ததை எடுத்துச்சொல்லி தமிழ்நாடு தேர்தலில் நாம் எடுக்க வேண்டி முடிவின் அவசியத்தை வலியுறுத்தினார். கழக சொற்பொழிவாளர்
அ.வேங்கைமாறன் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ் நாட்டிற்கு செய்யும் துரோகங்களை பட்டியலிட்டதோடு தமிழ்ப் பெண்களுக்குபாதுகாப்பில்லை என்று பிஜேபியினர் பேசுவது நல்ல நகைச்சுவை. வடமாநிலங்களில் கடந்த 10ஆண்டுகளில் காணாமல் போன பெண்கள் குழந்தைகள் பல்லாயிரக்கணக்கானோர் ஆவர். அதை மறைக்க தமிழ் நாட்டைக்குறை சொல்லி தப்பிக்கபார்க்கின்றனர் என்றார். நிறைவாக தலைமைக் கழக சொற்பொழிவாளர் பொறியாளர் ஆரூர் தேவ.நர்மதா எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா, பொ.தனுஷ்கோடி, சீ.தேவராஜபாண்டியன், பெரி.பாக்யலெட்சுமி, க.அழகர், சந்திரசேகர், நாகராணி, சீர்த்தி, அல்லி ராணி, பசு.மோதிலால், ஜேம்ஸ்., மோதிலால், எல்அய்சி.செல்லகிருட்டிண,.வழக்குரைஞர் பா.கருப்பசாமி, பழனிஆறுமுகாமோகன், இரா.அழகுப்பாண்டி, பெரியார் பிஞ்சு நன்னன், வண்டியூர் கிருஷ்ணமுர்த்தி, பெ.தனசேகரன், பாஸ்கரன் மற்றும் மேலும் பல தோழர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி மாவட்ட சார்பில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77Mம் ஆண்டு நினைவு நாள் 28.3.26 மாலை 6 மணியளவில் தெருமுனைக்கூட்டம் கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர் அவர்கள் தலைமையில், மாவட்ட கழக செயலாளர் குழ.செல்வராசு வரவேற்புரையாற்ற மாவட்ட கழக துணைத்தலைவர் பா.முத்து, மாவட்ட கழக துணைச் செயலாளர் எம்.சேகர், மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் புலவர் பெ. செயராமன், மாவட்ட ப.க செயலாளர் வீர.முருகேசன், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கழகப் பேச்சாளர் த.சீ.இளந்திரையன் சிறப்புரையில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியம் தந்தை பெரியார் அவர்களுடன் கழகப் பணியாற்றியது பற்றியும் விளக்கமாக தெளிவாக உரையாற்றினார்.
முடிவில் நகர தி.க செயலாளர் நா.பெரியார் நன்றி கூற கழகத் தோழர்களும் ஊர்ப் பொது மக்களும் அதிக அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் புதியதாக போறுப்பேற்ற மாவட்ட கழக துணைத்தலைவர் பா.முத்துவுக்கும், மாவட்ட கழக துணைச்செயலாளர் வடகரை தாழனூர் எம்.சேகருக்கும், மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் 28/03/2026 அன்று மாலை 7 மணி அளவில் புதுச்சேரி, முதலியார் பேட்டை, அஞ்சல் நிலையம் அருகில் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். மாவட்ட கழகச் செயலாளர் தி.இராசா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச் செல்வன், துணைத் தலைவர் மு. குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு, தொழிலாளரணித் தலைவர் வீர.இளங்கோவன், தெ.தியாகு, காப்பாளர் இரா. இராசு, அண்ணா பேரவைத் தலைவர் சிவ. இளங்கோ, மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இரா. முருகானந்தம், பி போல்ட் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு.பஷீர் முகமது மற்றும் மா.இளங்கோ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இறுதியாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சுயமரியாதைச் சுடரொளி அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் சிறப்புகள், தன்னலமற்ற தொண்டுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் மறைந்த சுயமரியாதை வீரர்களை நினைவுகூர்ந்து உரையாற்றினார் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தந்தை பெரியாரின் கொள்கைகளை நடைமுறை படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டைப் போன்ற திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரியிலும் அமைக்க உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வழக்குரைஞர் எல் சம்பத் அவர்களுக்கு பெருவாரியான வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கி. அறிவழகன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், இளைஞரணித் தலைவர் ச.சித்தார்த், புதுச்சேரி நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் எஸ். கிருஷ்ணசாமி, மு.ஆறுமுகம், களஞ்சியம். வெங்கடேசன், கொம்யூன் பொறுப்பாளர்கள் ஏம்பலம் தெ.தமிழ் நிலவன், பாகூர் பொ.தாமோதரன், இராம.சேகர், இரா.சுந்தர், கழகப் பேச்சாளர் புலவர். சு.இராவணன், மருவாய் சேகர், வடலூர் மோகன், செ.சுரேஷ், இள. கோவலன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் இரவி, தலைமை ஆசிரியர் சண்முகம், பாகூர். மணிமாறன், பழனி, நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் இரா.திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கழக சார்பில் பட்டுக்கோட்டை அழகிரி 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இரா. யமுனா அனைவரையும் வரவேற்றார். வாகையூரான், கா.ஏ.மோகனவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர் புவியரசன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மா.மணி, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்த கூட்டத்தில் சுஜாதா, உஷா, பாடகர் பன்னீர்செல்வம், எழில், வீரமணி, க.ஏ.தமிழ் முரசு, தேசய்யா, தண்டபாணி, ந. ரமேஷ், மணி, கோவர்தனம், லோகநாயகி, ரமணி சித்ரா, அறிவுக்கரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
தருமபுரி, அரூர்
சுயமரியாதை இயக்கத்தின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் தருமபுரி, அரூர் கழக மாவட்ட கழக சார்பில் 28.3.2026 அன்று மாலை 5 மணியளவில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது,மாவட்டச் செயலாளர் கருஞ்சட்டை மா.முனியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் க.கதிர், அ.சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை அவர்கள் இந்நிகழ்விற்கு தொடக்கவுரை நிகழ்த்தினார்.
அரூர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மேனாள் மாவட்டச் செயலாளர் பெ.கோவிந்தராஜ், கவிஞர் கீரை.பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினார்.
பங்கேற்ற கழகத் தோழர்கள்:
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கதிர்.செந்தில் குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ், மேனாள் மாவட்டத் தலைவர் மு.பரமசிவன்,மேனாள் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி,சிவாஜி சோபா ஊழியர் மாதேஸ், நகரச் செயலாளர் இரா.பழனி,தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் மு.சிசுபாலன், விவசாயி அணி மாவட்டத் தலைவர் ஊமை.காந்தி, காமலாபுரம் கிளைத் தலைவர் இரா.சின்னசாமி, பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா.சுந்தரம், அரூர் கழக மாவட்டம் பச்சியப்பன், அரூர் கழக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சஞ்சீவன், அரூர் கழக மாவட்டம் நெடுமிடல்,மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் பெ.கோகிலா, இளைஞரணி அ.பிரபாகரன், இளைஞரணி சிவாடி சங்கர், மாணவர் கழகம் கோ.சந்திரபோஸ், அம்பாளப்பட்டி சாமுவேல்,சுந்தர்ராஜன், செல்வகுமார், அபி (ஆசிரியர் நிவாசு பயிற்சி மய்யம்), சின்னமாது, நல்லம்பள்ளி கோவிந்தராஜன், பத்மினி திமுக, கம்யூனிஸ்ட் வடிவேல் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக மாணவர் கழக மாவட்டத் தலைவர் ச.கி.வீரமணி நன்றியுரை கூறினார்.
அரக்கோணம்
28-03-2026 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அரக்கோணம் பழனிப்பேட்டை அறிஞர் அண்ணா சிலை அருகில் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77 வது நினைவு நாள் தெரு முனைக் கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் சு.லோகநாதன், மாவட்ட காப்பாளர் சொ.ஜீவன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் அனைவரையும் வரவேற்றார் க.சு.பெரியார்நேசன் தொடக்க உரையாற்றினார் அரப்பாக்கம் தி.க.சின்னதுரை.
தொடர்ந்து கழக சொற்பொழிவாளர் முனைவர். காஞ்சி கதிரவன் சுமார் 1.30 மணிநேரம் சிறப்பான உரையை அளித்தார். 26 வார்டு சார்பாக கவுன்சிலர் ந.சிட்டிபாபு, டில்லிபாபு, வெங்கடேசன்,மூர்த்தி, பாபு, நல்லாசிரியர் சு.பாண்டியன், இராமச்சந்திரன், மற்றும் சிப்காட் ராஜாசார், ஏ.சு.ராஜா, தருமன் ஆகியோர் கலந்து கொண்டனர். சவுந்தர் நன்றி கூற இனிதே கூட்டம் நிறைவுற்றது.
